பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டிக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர்

பாகிஸ்தானில் சர்வதேச கிரிகெட் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்ற, அரிதாக நிகழும் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை AP

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிகெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர், இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர்.

10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் 5 அடுக்கு பாதுகாப்பு நிலைகளை தாண்டி சென்று இந்த போட்டியை பார்க்க வேண்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

இந்த இறுதிப்போட்டியில் மோதுகின்ற குவட்டா கிளாடியாட்டோஸ் மற்றும் பெஷாவர் ஜல்மி ஆகிய இரண்டு அணிகளில் இருந்து, இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் நடைபெற்ற போட்டி ஆட்டங்களில் பங்கேற்றிருந்த பல வெளிநாட்டு கிரிகெட் நடசத்திரங்கள் இப்போட்டியில் விளையாடாமல் வெளியேறியுள்ளனர்.

ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டரென் சாமி உள்பட பிறர் இந்த இறுதிப்போட்டியில் ஆடுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்