ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மிஸ்பா -உல்-ஹக்

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரும், அந்நாட்டின் முன்னணி பேட்ஸ்மேனுமான மிஸ்பா -உல்-ஹக் , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக மிஸ்பா -உல்-ஹக் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாக மிஸ்பா -உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மிஸ்பா -உல்-ஹக் கூறுகையில்,''எனது கிரிக்கெட் பயணம் சிறப்பாக இருந்தது. எனது பயணத்தில் பல இடையூறுகள் இருந்தன. ஆனால், தற்போதுள்ள சூழல் குறித்து நான் கர்வமடைகிறேன்'' என்று மிஸ்பா உல் ஹக் கூறினார்.

"ஒய்வு பெறுவது தொடர்பாக எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக துவங்கவுள்ள தொடர் நல்ல வாய்ப்பாக அமையும்'' என்று மிஸ்பா தெரிவித்தார்.

Image caption ஒய்வு பெறும் மிஸ்பா -உல்-ஹக்

இந்திய அணிக்கு எதிராக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள மிஸ்பா -உல்-ஹக் , 2007-ஆம் ஆண்டு நடந்த 20-20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இறுதியில் ஜோகிந்தர்சிங் பந்துவீச்சில், மிஸ்பா -உல்-ஹக் அடித்த பந்தை ஸ்ரீசாந்த் பிடிக்க இந்தியா கோப்பையை வென்றது.

கடந்த 2015- ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து மிஸ்பா -உல்-ஹக் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில செய்திகள்:

ஐபிஎல் போட்டிகள்: கிரிக்கெட்டின் பலமா, பலவீனமா?

பாகிஸ்தானில் சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு வெற்றிகரமாக நடந்த பெரிய கிரிக்கெட் போட்டி

ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடக்கவில்லை: ஆங் சான் சூ சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்