கர்ப்ப காலத்திலும் டென்னிஸ் சாம்பியன் - எப்படி சாதித்தார் செரீனா?

  • 22 ஏப்ரல் 2017

"செரீனா வில்லியம்ஸ் கருத்தரித்து கர்ப்பமாக இருக்கின்றபோது போட்டியிட்டு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வென்றுள்ளார். எனவே. ஒவ்வோர் ஆணும் தங்களை பற்றி பெருமையடித்து கொள்வதை நிறுத்திவிடலாம்" என்று ஆண் ஒருவர் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தற்போது 20 மாத கர்ப்பிணி என்றால், சமீபத்திய ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று வரலாற்று சாதனைப் பதிவை தன்னுடைய 35வது வயதில் எட்டு வார கர்ப்பிணியாக அவர் உருவாக்கியுள்ளார்.

அவருடைய இந்த செயலால் எல்லா காலத்திலும் சாதனையாளராக கருதப்படுபவார். பெருமளவு மெச்சப்படக்கூடியவராக இருப்பார் என்று ஆண்களும் பெண்களும் சமூக ஊடகங்களில் கொண்டாடும்படியாக இந்த செய்தி வெளிவந்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கர்ப்பகாலத்தில் கடின விளையாட்டு - செரீனா ஒருவர் மட்டுமா ?

சாக்குப்போக்குகள் சொல்லி தப்பிக்க முயல்கின்ற தங்களின் செயல்களோடு இதனை ஒப்பிட்டுள்ள பெண்கள் வரிசையாக கருத்துக்கள் பலவற்றை தெரிவித்துள்ளனர்.

"இத்தகைய நேரத்தில் சில வேளைகளில் நான் பேசவும், நடப்பதற்கும் கூட மனமின்றி இருந்திருக்கிறேன் என்று டிவிட்டர் பதிவிட்ட ஒரு பெண் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்ப்ப கால கடினமான தொடக்க நிலைகள்

கர்ப்ப கால தொடக்க நிலைகளில் அதிக செயல்பாடுகளை மேற்கொள்வது சவாலாக அமையும் என்பதுதான் உண்மை.

படுக்கையை விட்டெழுவது? வேலை செய்வது? காலை உணவு சாப்பிடுவது? அனைத்தும் வேண்டா வெறுப்பாக தோன்றலாம். இந்த காலத்தில் பெண்களிடம் மாபெரும், உடல் மற்றும் உள ரீதியிலான மாற்றங்கள் ஏற்படுவதே இதற்கெல்லாம் காரணமாகும்.

கர்ப்பத்தை வெளிக்காட்டும் உடல் அடையாளங்கள் வெளியே தெரிவதற்கு முன்னர், ஹார்மோன்கள் அதிகரித்து பெருகுவதால், உடலின் செயல்பாடுகளில் தீவிர மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஒரு டென்னிஸ் வீராங்கனை தாயாகிறார்

ஆஸ்திரேலிய ஓபனில் செரீனா சாதனை படைப்பாரா?

தொடக்க வாரங்களின்போது, புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அதிகரிப்பால் சிலவேளைகளில் பெண்கள் சோர்வடைகின்றனர்.

இதற்காக ஓய்வு எடுக்க வேண்டுமென சொல்வதுதான் வழக்கமான அறிவுரை. ஆனால், செரீனாவிற்கு நிச்சயமாக அப்படியல்ல.

மதியவேளை வந்தாலும் முடிவுபெறாத குமட்டல் அல்லது மசக்கையால் (காலை சுகவீனம்) பல பெண்கள் அல்லல்படுகின்றனர். மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு சில பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெரும்பாலான பெண்களுக்கு வாந்தி அல்லது குமட்டுதல் அன்றாட பிரச்சனை. சிலவேளைகளில் கர்ப்பம் உறுதி செய்யப்படுவதற்கு முன்னரே இந்த பிரச்சனை தொடங்கிவிடுகிறது.

குமட்டலால் பாதிக்கப்படாமல் தொடக்க சில வாரங்கள் கழித்துவிட்ட அதிஷ்டசாலியாக செரீனா இருந்திருந்தாலும், பிற உடல் ரீதியான மாற்றங்களை அவர் அனுபவித்தே இருப்பார்.

மார்பகங்கள் மென்மையாகி, மிக முன்னதாகவே வீங்கிவிடுதல், கழிவறைக்கு அடிக்கடி செல்லுதல், உணவு மற்றும் மணத்தை நுகர்வதற்கு (நாற்றம்) திடீர் வெறுப்பு போன்றவை இதில் அடங்குகின்றன.

டென்னிஸ் விளையாட்டில் வரலாறு படைத்தார் செரீனா

அதிக ஆட்டங்களில் வென்ற 10 டென்னிஸ் பிரபலங்கள்

கர்ப்ப காலத்தின்போது, உடலில் இருக்கும் ரத்த அளவு அதிகரிக்கிறது. இதனால், இறுதியில் சிறுநீர்ப்பையை சென்றடைகின்ற அதிக நீர்மங்களை சிறுநீரகங்கள் சுரக்க செய்கின்றன.

வளர்ந்து வருகின்ற கருவை பராமரிக்க உடல் தயாராகுவதால் கருத்தரிப்பு ஹார்மோன்கள் மலச்சிக்கலையும், நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தலாம்.

ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதைபோல, கருத்தரித்து ஐந்தாவது வாரத்தில் இருந்து, கருவிற்கு ரத்தம் வழங்குகின்ற இதய மற்றும் இரத்தக்குழாய் அமைப்பில் கணிசமான மாற்றங்களை செரீனா அனுபவித்திருக்கக்கூடும்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி நல்லது. குழந்தைகளுக்கு ஆபத்தானது அல்ல என்று தேசிய சுகாதார சேவையின் இணையதளம் தெரிவிக்கிறது. பெண்கள் தங்கள் வசதியாக உணர்வது வரை தீவிர செயல்பாடுகளுடன் இயங்க இது ஊக்கமூட்டுகிறது.

இந்த தொடக்க நிலைகளை கடந்துவர செரீனாவின் கட்டுடல் நிலைகள் மற்றும் பயிற்சிக்காலம் நன்றாகவே உதவியிருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

மூளையில் மாற்றம்

இருப்பினும், ஒரு பெண்ணின் மூளையில் சிறிது மாற்றமும் நடைபெறுகிறது.

மூளையின் சில பகுதிகளிலுள்ள பெரும்பாலான நரம்பு மண்டலங்களை உள்ளடக்கிய "கிரே மேட்டரை" கர்ப்பம் குறைத்துவிடுவதாக சமீபத்திய ஆய்வு கண்டறிந்திருக்கிறது. பெண் தன்னுடைய குழந்தையோடு பிணைப்பை உருவாக்கவும். தாய்மைக்கு தேவையானதை தயார் செய்யவும் இது உதவுகிறது.

கர்ப்பகாலத்தில் கடின விளையாட்டு - செரீனா ஒருவர் மட்டுமா ?

டென்னிஸ்: செரீனா, ப்ரையன் சகோதரர்கள் சாதனை

கர்ப்பத்தின்போது, மூளையில் ஏற்படும் மூளை மாற்றங்களின் அளவு இளம் பருவத்தில் காணப்படுபடுவதற்கு ஒத்ததாக அமையும் என்கிறர்கள் ஆய்வாளர்கள்.

தொடக்க நிலைகளின்போது, மனநிலை மாற்றங்களை பல பெண்கள் அனுபவிப்பதை இது விளக்குகிறது.

எனவே, ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தற்செயலாக தோல்வியடையாத செரீனா, சற்றே கவனக்குறைவாக இருந்தாலும் மன்னிக்கப்பட்டிருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் சாதித்த வீராங்கனைகள்

ஆனால், கர்ப்பக்காலத்தில் உயர்நிலை ஆட்டத்தில் பங்கேற்ற முதல் பெண்ணல்ல இவர்.

பௌலா ரட்கிளிப்ஃபி உள்பட மாரத்தான் ஓட்ட வீராங்கனைகள் கர்ப்ப காலத்தில்தான் சிறப்பாக அடிக்கடி ஓடியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு, அம்பு எய்தல், வட்ட கற்களை குறிப்பிட்ட இலக்கிற்கு பனியில் சறுக்க செய்யும் விளையாட்டு, குதிரை சவாரி போன்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கர்ப்ப காலத்தில் பங்கேற்ற பெண்களிள் பலர் முன்மாதிரிகளாக உள்ளனர்.

"உயர் தர விளையாட்டு வீராங்கனைகளுக்கு என்றே உருவாக்கப்பட்ட பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து திட்டம் வழக்கமாக சிறப்பு அணியால் உருவாக்கப்படுகின்றது. எட்டு வார கரு வளர்ச்சிக் காலத்தில் வீராங்கனைகளுக்கும், இத்தகைய உயர் நிலை உடற்பயிற்சிகளை செய்து பழக்கமானோருக்கும் வழங்கப்படும் உயர்நிலை உடற்பயிற்சிகள் இந்த வீராங்கனைகளின் கர்ப்பத்தை பாதிக்காது" என்று ராயல் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் ஜானிஸ் ரேமெர் தெரிவித்திருக்கிறார்.

"கர்ப்பத்தின் தொடக்க சில வாரங்களின்போது பெண்களின் இயல்பான ஸ்டீராய்டு உற்பத்தி லோசாக அதிகரிப்பதால், இந்த ஹார்மோன்கள் உடல் ரீதியான செயல்திறனை உண்மையிலே அதிகரிக்கலாம்”.

கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமை : 560 பேர் பாதிப்பு?

"சோர்வு குறைதல், முதுகு வலி குறைதல், வெரிக்கோஸ் நரம்புகள் மற்றும் கணுக்கால்கள் வீக்கம் உள்பட கர்ப்ப காலத்தில் தீவிர செயல்பாட்டுடன் இருப்பது உடல் நலத்தில் பல பயன்களை வழங்குகிறது”.

ஓபன் டென்னிஸ் போட்டியில் மற்ற வீராங்கனைகளைவிட அதிக கிராண்ட ஸ்லாம் போட்டிகளில் வென்று, அவருடைய விளையாட்டில் உச்சத்தில் இருந்தபோது, செரீனா இந்த சிறப்பான சாதனையை பதிவு செய்திருக்கிறார்.

வரும் இலையுதிர் காலத்தில் குழந்தை பிறந்த பின்னர் 12 மாதங்களுக்குள் செரீனா மீண்டும் விளையாட தொடங்கிவிட்டால், திங்கள்கிழமை உலக தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருந்து முதலிடத்திற்கு மாறயிருக்கும் விளையாட்டு தர வரிசையோடு அவர் விளையாட அனுமதிக்கப்படுவார்.

காணொளி: கனடா வீரர் நடுவரின் கண்ணில் தாக்கியதால், பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அசாதரணமான சூழ்நிலையால் பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி

இந்த செய்திகளிலும் நீங்கள் ஆர்வம் காட்டலாம்:

காணொளி: விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பந்தய மோசடியா?

டென்னிஸ் வெற்றிக்குக் காரணம் ஆட்டத்திறனா, கட்டுடலா?

டென்னிஸ் மோசடிகள்:சுயாதீன மறுஆய்வுக் குழு அமைப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்