நீதிமன்றத்தின் கைது உத்தரவை அடுத்து இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தில்ஷான் சரண்

  • 25 ஏப்ரல் 2017
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தில்ஷான் நீதிமன்றத்தில் சரண்

கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் இன்று தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA/AFP/Getty Images

ஜீவனாம்சம் கோரி அவரது முன்னாள் மனைவி தாக்கல் செய்துள்ள வழக்கொன்றில் தில்ஷான் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

முன்னாள் கேப்டன்கள் மீது தில்ஷான் குற்றச்சாட்டு

சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, திலகரத்ன தில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

எனவே, அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA/AFP/Getty Images

இன்று தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் சரணடைந்த தில்ஷான் கைது உத்தரவை வாபஸ் பெறுமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திலகரத்ன தில்ஷான் ஒய்வு

அந்த வேண்டுகோளுக்கு இணங்க, கைது உத்தரவை வாபஸ் பெற்ற நீதிபதி வழக்கு விசாரணைகளுக்கு தவறாமல் வர வேண்டுமென திலகரத்ன தில்ஷானுக்கு ஆணையிட்டார்.

அதன் பின்னர், அடுத்த மாதம் 24 தேதி நடைபெறும் விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு தில்ஷானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணொளி: ஒன்றரை வயது குழந்தையின் அபார கிரிக்கெட் திறமை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குழந்தை கிரிக்கெட் வீரர்

இந்த செய்திகளிலும் நீங்கள் ஆர்வம் காட்டலாம்

டி-20 உலகக் கோப்பை: இலங்கை அணிக்கு முதல் தோல்வி

டி-20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு இலங்கை தகுதி

தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மஹேல ஜெயவர்தன

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்