ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா பங்கேற்பு: பிசிசிஐ சமரசம்?

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் தாங்கள் பங்கேற்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது வருவாய் பகிர்வு திட்டத்தை மாற்றிய பிறகு, சாம்பியன்ஸ் தொடருக்கு இந்தியாவின் சார்பாக விளையாடும் அணி அறிவிக்கப்படவேண்டிய காலக்கெடுவினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிபிசிஐ) தவறவிட்டது.

எனினும், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடவுள்ள இந்திய அணியை தேர்ந்தெடுக்க பிசிசிஐ-யின் தேர்வாளர்கள் கூட்டம் மே 8-ஆம் தேதி திங்கள்கிழமை நடக்கவுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடும் இந்திய அணியை அறிவிக்க ஆரம்பத்தில் வழங்கப்பட்ட காலக்கெடு ஏப்ரல் 25-ஆம் தேதியாகும். ஆனால், இந்த காலக்கெடுவுக்குள் அணியை அறிவிக்காத காரணத்தால் இந்தியாவுக்கு அனுமதி மறுப்பு எதுவும் விதிக்கப்படாது.

பிற முக்கிய செய்திகள் :

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்

ஒல்லியான அழகிகளுக்கு ஃபிரான்ஸ் தடை

விமானத்தில் பயணிக்க நிரந்தரமாக தடை விதிக்கப்படலாம்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்