இத்தாலி: கால்பந்து போட்டியை திரையில் பார்த்தபோது, கூட்ட நெரிசலில் 1500 பேர் காயம்

சதுக்கத்தை விட்டு வேகமாக வெளியேறியதால் பரும் தங்களின் காலணிகளை இழந்தனர் படத்தின் காப்புரிமை EPA
Image caption சதுக்கத்தை விட்டு வேகமாக வெளியேறியதால் பரும் தங்களின் காலணிகளை இழந்தனர்

இத்தாலியின் டியூரின் நகரில், சனிக்கிழமை இரவு நிகழ்ந்த ஒரு பட்டாசு வெடிப்பால் உருவான கூட்ட நெரிசலில் சுமார் 1500 பேர் காயமடைந்துள்ளனர்.

ரியல் மாட்ரிட் எதிராக ஜுவண்டிஸ் கால்பந்து அணி விளையாடிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை கார்டிஃபில் நேரலையில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து கொண்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பெரிய திரையில் கால்பந்து விளையாட்டு போட்டியை பார்க்க மக்கள் அந்த இடத்தில் நிறைந்திருந்தனர்

அப்போது பெரிய வெடிசத்தம் கேட்டதும், குண்டுவெடித்து விட்டதாக வதந்தி பரவியது. ஒரு சிறுவன் உள்பட குறைந்தது 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆண் வேடத்தில் கால்பந்து போட்டியைக் காணவந்த இரானியப் பெண்கள் தடுப்பு

2026 உலக கால்பந்து போட்டியில் ஆப்ரிக்க அணிகளின் பங்கேற்பு அதிகரிக்கும் - ஃபிஃபா

ரியல் மாட்ரிட், ஜுவண்டிஸ் அணியை 4-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து, சாம்பியன் லீக் கோப்பையை 12வது முறையாக வென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரியல் மாட்ரிட், ஜுவண்டிஸ் அணியை 4-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது

போட்டி நிறைவடைய 10 நிமிடங்கள் இருந்தபோது, பியாஸ்ஸா சென் கார்லோவின் மையத்தில் இருந்து தடுப்பரண்கள் மீது நசுங்கியபடி மக்கள் கூட்டமாக ஒட தொடங்கினர்.

கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமை : 560 பேர் பாதிப்பு?

வடகொரியாவில் மலேஷிய கால்பந்து வீரர்களுக்கு விஷம் வைக்கப்படலாம் என அச்சம்

இந்த சதுக்கத்தில் இருந்து கூச்சலிட்டு கொண்டு மக்கள் ஓடியபோது, பைகள், காலணிகள் அவ்விடத்தில் சிதறி கிடந்தன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption குப்பைகளுக்கு மத்தியில் காயமடைந்தோருக்கு உதவி

தலை மற்றும் நெஞ்சில் காயங்களுடன் 7 வது சிறுவன் உள்பட 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்

வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்-2

வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்-3

நிலத்தடி கார் நிறுத்துமிடத்திற்கு செல்லும் வழியை சுற்றியிருந்த தடுப்பரண் விழுந்தபோது, பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சதுக்கம் முழுவதும் ரசிகர்களால் விட்டு சென்ற காலணிகளாலும், பைகளாலும் சிதறி கிடந்தன

இந்த சம்பவம், ஜுவண்டிஸ் கால்பந்து ரசிகர்களுக்கு 1985-ஆம் ஆண்டு ஹெசெல் விளையாட்டு திடலில் நிகழ்ந்த கொடிய விபத்தின் சோகத்தை நினைவூட்டியது.

லிவர்பூலுக்கு எதிரான ஐரோப்பிய கோப்பை இறுதி ஆட்டத்திற்கு முன்னால். சுவர் ஒன்று இடிந்து ரசிகர்கள் மீது விழுந்ததால் 36 பேர் இறந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்