காலியான இருக்கைகள்: இது இந்தியா-பாக்., கிரிக்கெட் போட்டிதானா?

பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் வழக்கத்துக்கு மாறாக பல இருக்கைகள் காலியாக இருப்பதை காணமுடிகிறது.

காலியான இருக்கைகள்: இது இந்தியா-பாக்., கிரிக்கெட் போட்டிதானா?

பட மூலாதாரம், Getty Images

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிக்க, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 9.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ள நிலையில், மழை குறுக்கிட்டது.

அரைமணி நேரத்துக்கும் மேலான தாமதத்துக்கு பிறகு மீண்டும் தற்போது ஆட்டம் துவங்கியுள்ளது.

அரங்கு முழுவதும் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் குழுமியுள்ளனர் என்றாலும், மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டிக்கான பல இருக்கைகள் இன்னும் காலியாகவுள்ளதை காண முடிகிறது என்று அங்கிருக்கும் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் கூறுகிறார்.

லண்டனில் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், பாதுகாப்பில் பெரிய கெடுபிடிகள் காணப்படவில்லை.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்