சாம்பியன்ஸ் டிராஃபி: இலங்கை மட்டைவீச்சாளர்களின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா

  • 8 ஜூன் 2017

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், இன்று வியாழக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடந்த போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

படத்தின் காப்புரிமை PA
Image caption மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் வென்றது இலங்கை

322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டை 5-ஆவது ஓவரில் பறிகொடுத்தாலும், மெண்டிஸ் மற்றும் குணதிலக ஆகிய இரு இலங்கை வீரர்களும் நன்கு அடித்து விளையாடினர்.

மெண்டிஸ் 89 ரன்களையும், குணதிலக 76 ரன்களையும் குவித்தனர். இருவரும் பின்னர் ஆட்டமிழந்த போதிலும், அரைச்சதம் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்த இலங்கை கேப்டன் மாத்யூஸ் இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ்

48.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 322 ரன்களை பெற்ற இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக மற்றும் நேர்த்தியாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில். நேர்த்தியான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. ஏராளமான ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதே போல், இந்திய பீல்டர்கள் பல கேட்ச்களை பிடிக்க தவறியதால், அதுவும் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது.

முன்னதாக, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ், முதலில் இந்தியா பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே இரு தொடக்க ஆட்டக்காரர்களும் நன்கு அடித்தாடினார். இந்திய அணி 138 ரன்களைக் எடுத்திருந்த நிலையில் 78 ரன்களை எடுத்த ரோகித் சர்மா அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய இந்திய அணித்தலைவர் கோலி, இலங்கை பந்துவீச்சாளர் பிரதீப் பந்துவீச்சில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷிகர் தவான், 1 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளின் துணையோடு 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 125 ரன்கள் எடுத்த ஷிகர் தவான்

டோனி மற்றும் கேதார் ஜாதவின் அதிரடியால் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்தியா 321 ரன்கள் எடுத்தது. 13 பந்துகளில் 25 ரன்களைக் குவித்து தனது அதிரடி ஆட்டத்தை ஜாதவ் வெளிப்படுத்தினார்.

பிற செய்திகள்:

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

எட்ஜ்பாஸ்டனில் இந்திய வீரர்கள் 'சரவெடி': பாகிஸ்தானுக்கு 289 வெற்றி இலக்கு

மாட்டிறைச்சி சர்ச்சை முடியவில்லை, மோமோஸுக்கு தடை கோருகிறார் பாஜக உறுப்பினர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்