ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று 'புதிய வரலாறு' படைத்த ஜெலீனா ஆஸ்டாபென்கோ

  • 10 ஜூன் 2017

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இது வரை இடம்பெறாத வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, 2017-ஆம் ஆண்டின் மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்த ஜெலீனா ஆஸ்டாபென்கோ

மேலும், லாத்வியா நாட்டை சேர்ந்த முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற பெருமையை ஜெலீனா ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், 20 வயதான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, முதல் செட்டை இழந்து பின்தங்கி இருந்த போதிலும், பின்னர் போராடி 4-6 6-4 6-3.என்ற செட் கணக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை ஆஸ்டாபென்கோ வென்றார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற ஜெலீனா ஆஸ்டாபென்கோ

கடந்த 1933-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற சாதனையையும் ஜெலீனா ஆஸ்டாபென்கோ படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெலீனா ஆஸ்டாபென்கோ, ''எனது 20 வயதில் நான் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி விட்டேன் என்று என்னால் நம்பமுடியவில்லை. இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எனது கனவு; இது நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று தெரிவித்தார்.

இதுவும் படிக்கலாம்:

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இலங்கையிடம் இந்தியா தோற்றது எதனால்?

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

டிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்