சொந்த மண்ணில் உசைன் போல்ட்டுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை

உசைன் போல்ட் படத்தின் காப்புரிமை Getty Images

தன்னுடைய சொந்த மண்ணான ஜமைக்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் இறுதிப்போட்டில் வென்ற உசைன் போல்ட், விளையாட்டு அரங்கம் நிறைந்திருந்த மைதானத்தில் இருந்து உணர்ச்சிகரமான பிரியாவிடை பெற்றிருக்கிறார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தன்னுடைய ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கும் 30 வயதான உசைன் போல்ட், கிங்ஸ்டனில் 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னால் பிரியாவிடை பெற்றுள்ளார்.

எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓட்டப்போட்டியை வென்று “தடகள ஜம்பவான்” என்ற பெருமையை எளிதாக வென்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜமைக்காவில் வாணவேடிக்கை முழங்க, நடனமாடிய, கொடிகளை அசைத்து கொண்டிருந்த மற்றும் கொம்புகளால் இசை எழுப்பிய ரசிகர் கும்பலுக்கு மத்தியில், 10.03 வினாடிகள் நேரத்தில் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தை வென்றார்.

சக வீரரின் தவறால் பதக்கம் இழக்கும் உசைன் போல்ட்

தங்கப் பதக்கத்தை இழக்கிறார் உசைன் போல்ட்

தனக்கே உரித்தான அடையாள செயலான "லைட்டனிங் போல்ட்" அசைவை வெளிப்படுத்தும் முன்னர், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் உலக வரலாற்று பதிவை கொண்டிருக்கும் உசைன் போல்ட், போட்டி முடிவடையும் எல்லைக்கோட்டிற்கு சென்று அதனை முத்தமிட்டார்.

"நான் செய்திருப்பது பெரிய விடயம் என காட்டுகிறது"

கிட்டத்தட்ட தன்னுடைய மோசமான ஓட்டங்களில் ஒன்றான இந்த ஓட்டப்போட்டியால் போல்ட் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கமாட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், இத்தனை ஆண்டுகளாக அவருக்கு ஆதரவு அளித்து வந்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி செலுத்துவதை வெளிக்காட்டுவதற்காக, பாதிப்பு எதுவும் ஏற்படாமல், மக்கள் கூட்டத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு காட்சியை வழங்க வேண்டுமென அதிக கவனமாக அவர் இருந்துள்ளார்.

"இந்த சூழ்நிலை, மக்கள் ஆர்வத்தோடு வந்து, எனக்கு ஆதரவு அளித்தது அனைத்தும் உண்மையிலேயே சாதனைகள்" என்று அவர் பேசுகையில் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீதான நடவடிக்கை: உசைன் போல்ட் வரவேற்பு

200 மீட்டரிலும் வென்றார் உசைன் போல்ட் -'மும்முறை மூன்றை' நோக்கிப் பயணம்

"இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் பெரிதாக இருக்க போகிறது என்று எனக்கு தெரியும். இந்த விளையாட்டு அரங்கம் முற்றிலும் நிறைந்துள்ளது. எனக்காக வந்து ஆதரவு அளித்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி" என்று உசைன் போல்ட் தெரிவிதிருக்கிறார்.

ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோலஸ், சர்வதேச தடகள சங்க கூட்டமைப்பின் தலைவர் செபாஸ்டின் கோய் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

"அனைவரும் இங்கு வந்துள்ளனர். விளையாட்டு துறைக்கு நான் அதிக பங்காற்றியிருப்பதை இது காட்டுகிறது. அவர்கள் உண்மையிலேயே வாழ்த்துகிறார்கள்" என்று போல்ட் குறிப்பிட்டார்.

"நன்றி. தடகள விளையாட்டு தொடர்ந்து உயர்ந்த இடத்தில் இருக்க செய்வது எனது பெருமையாக அமையும். என்னால் இயன்ற அளவு தடகள விளையாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்வேன்" என்று போல்ட் தெரிவித்திருக்கிறார்,

"போல்ட் இன்னும் 40 ஆண்டுகள் ஓட வேண்டும் என்று விரும்புகிறேன்"

100 மீட்டர், 200 மீட்டர், மற்றும் 4x100 தொடர் ஓட்டம் ஆகிய மூன்றிலும் பெய்ஜிங் 2008, லண்டன் 2012, ரியோ 2016 என கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் போல்ட் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில், மூன்று போட்டிகளில் மூன்று முறை தங்கம் வென்று இதற்கு முன்னர் யாரும் நிகழ்த்தாத இமாலய சாதனையாக திகழும் உசைன் போல்ட்டின் 9 பதக்கங்களில் ஒன்று, அவருடன் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டம் ஓடிய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தால் பறிக்கப்பட்டுள்ளது. கார்டர் என்ற அந்த வீரர் இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனாலும், போல்ட்டின் செயற்கரிய சாதனை இதற்கு முன்னர் செய்யப்படாததாகவே உள்ளது. அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 9.59 வினாடிகள் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில், 19.19 வினாடிகள் என்ற வரலாற்று பதிவை படைத்திருக்கிறார்.

"உசைன் போல்ட் இன்னும் 40 ஆண்டுகள் ஓட வேண்டும் என்று விரும்புகிறேன். அவரை தடகள விளையாட்டில் இருந்து இழக்க இருக்கிறோம்" என்று போல்ட் வளர்ந்த டிரிலாவ்னி பிராந்தியத்தில் இருந்து ஜமைக்காவில் நடைபெற்ற இந்த ஓட்டப்போட்டியை காண வந்திருந்த பழ வியாபாரி கார்லோஸ் மோர்கன் தெரிவித்தார்.

"அவர் ஒய்வுபெறுகின்றபோது தடகள விளையாட்டிற்கு என்ன ஆகப்போகிறது என்று தெரியவில்லை. அவர் ஜமைக்காவுக்கு மட்டும் ஆசீர்வாதம் அல்ல. தடகள விளையாட்டிற்கும், உலகிற்குமே அவர் ஒரு ஆசீர்வாதம்" என்று அவர் தெரிவித்தார்.

ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட், அடுத்து என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட், அடுத்து என்ன?

பிற செய்திகள்

யார் இந்த அய்யாக்கண்ணு?

`ஆண்களே அடக்கமாக அமருங்கள்` தெரிவிக்கும் ஸ்பெயின்

போயஸ் தோட்ட இல்லத்தில் தீபா நுழைய முயன்றதால் பதற்றம்

கல்வியும், ஆன்மீகப் பயிற்சியும் அளிக்கும் பாரம்பரிய இந்திய மகளிர் பள்ளிக்கூடம் (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்