பேட்மிண்டன்: இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டம் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசி சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை GOH CHAI HIN/AFP/GETTY IMAGES
Image caption இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டம் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் தொடரின் இறுதியாட்டத்தில் ஜப்பானின் கசுமசா சாகாயை 21-11, 21-19 என்ற நேர் செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.

இத்தொடர் முழுவதும் நன்றாக விளையாடி வந்த ஸ்ரீகாந்த், இறுதியாட்டத்தில் எதிராளிக்கு சற்றும் இடம் தராமல் மிகச் சிறப்பாக விளையாடினார்.

இன்றைய வெற்றியின் மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார்.

இந்த பட்டத்தை வென்றதன் மூலம், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலுக்கு பிறகு சூப்பர் சீரீஸ் தொடர்களில் மிகவும் வெற்றிகரமான இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் 'ரன்மழை' : இந்தியாவுக்கு 339 இலக்கு

இந்திய வெற்றிப் பயணத்தின் 5 முக்கிய அம்சங்கள்

போர்ச்சுக்கல் காட்டுத் தீ: போராடும் தீயணைப்பு வீரர்கள்

கஜுராஹோ கோயிலில் காமசூத்ரா விற்க தடை கோரும் இந்து அமைப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்