இந்தியா - பாகிஸ்தான்: கிரிக்கெட்டில் படுதோல்வி; ஹாக்கியில் அமோக வெற்றி

  • 18 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை THEHOCKEYINDIA

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அமோகவெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் சிங், டல்விந்தர் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

போட்டி தொடங்கிய பிறகு இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்து போட்டியில் அணிக்கு முன்னிலையை கொடுத்தார்.

போட்டியின் முதல் காலிறுதி பகுதியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தில் முன்னிலை பெற்றிருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், பாகிஸ்தான் அணியை இருமுறை 7-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதே வேளையில், லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

அதுவும், முக்கியப் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள் :

இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்

பேட்மிண்டன்: இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டம் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

கஜுராஹோ கோயிலில் காமசூத்ரா விற்க தடை கோரும் இந்து அமைப்பு

`கோடி’ வாக்குறுதியை நிறைவேற்ற ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்