பேட்மிண்டன்: அடுத்தடுத்து 2 சூப்பர் சீரீஸ் பட்டங்கள் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

சிட்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமைடைபெற்ற ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதியாட்டத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் சென் லோங்கை 22-20, 21-16 என்ற நேர் செட்களில் வென்று அப்பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை WILLIAM WEST/AFP/GETTY IMAGES
Image caption ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் பட்டம் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு சூப்பர் சீரீஸ் பட்டங்களை ஸ்ரீகாந்த் வென்றுள்ளார்.

சனிக்கிழமையன்று நடந்த அரையிறுதி போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம், உலக அளவில் தொடர்ச்சியாக மூன்று சூப்பர் சீரீஸ் தொடர்களில் விளையாடும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றார்.

ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் தொடர்களின் இறுதியாட்டங்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை GOH CHAI HIN/AFP/GETTY IMAGES

முன்னதாக, கடந்த 18-ஆம் தேதியன்று, ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் தொடரின் இறுதியாட்டத்தில் ஜப்பானின் கசுமசா சாகாயை 21-11, 21-19 என்ற நேர் செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார். இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

பேட்மிண்டன்: இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டம் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

தட்சணைக்கு காசு இல்லையா ? கிரெடிட் கார்டை பயன்படுத்தலாமே – இது இங்கிலாந்தில்

மூளையில் காயம்பட்டும் தூரிகை ஏந்தும் அதிசய மனிதர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்