இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

  • 11 ஜூலை 2017

இந்திய கிரிக்கெட் அணியின் தலமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரவி சாஸ்திரி

பவுலிங் பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ, செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைப்படி, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லஷ்மணன் ஆகியோர் கொண்ட குழு இந்தத் தேர்வை நடத்தியது.

அணியின் சிறப்பான முன்னேற்றத்துக்காக, இந்த நியமனங்களைப் பரிந்துரைத்திருப்பதாக பிசிசிஐ கெளரவ செயலர் பொறுப்பு வகிக்கும் அமிதாப் செளத்ரி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜாகீர்கான்

இந்த நியமனத்துக்கான காலம், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை நீடிக்கும்.

ரவி சாஸ்திரி, இதற்கு முன்பு இந்திய அணியின் இயக்குநராக இருந்தார். அவருக்கு வீர்ராகவும் பயிற்சியாளராகவும் அனுபவம் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இளம் வீர்ர்களுக்கு பந்துவீச்சுப் பயிற்சியளித்து புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கும் ஜாகீர் கானின் அனுபவம் இந்திய அணிக்கு புத்துயிரூட்டும் என பிசிசிஐ கருதுகிறது.

இந்திய அணி அடுத்த இரு ஆண்டுகளுக்கு பல வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், ராகுல் திராவிட்டின் பேட்டி பயிற்சி இளம் வீர்ர்களுக்கு மிகமிக உதவியாக இருக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராகுல் திராவிட்

அனில் கும்ப்ளே விலகல்

இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, அணியின் கேப்டன் விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் பதவி விலகினார்.

முன்னதாக, பல்வேறு குழப்பங்கள் காரணமாக, எம்.எஸ். தோனி, கேப்டன் பதவியில் இருந்து முற்றிலும் விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஏற்கெனவே பல்வேறு விதமான நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் செல்வாக்கும், செல்வமும் மிக்க இந்திய கிரிக்கெட் வாரியம், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது.

இதையும் படிக்கலாம்:

5 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை இழந்த கங்னம் ஸ்டைல்

ரஷ்யா: '30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார்'

உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்