விளையாட்டு வீராங்கனைகள் 'ஆன்டி மெர்ரியை விரும்புகிறார்கள்' - செரீனா

  • 16 ஜூலை 2017

"பெண்களின் பிரச்சனைகளுக்காக பேசியிருப்பதால்", பெண் வீராங்கனைகள் "அன்டி மெர்ரியை விரும்புகின்றனர்" என்று 7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Clive Brunskill/Getty Images

புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதியை அடைந்த முதல் டென்னிஸ் வீரர் சாம் குவேரி என்று பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

வில்லியம்ஸ் மட்டுமே இந்த போட்டிகளில் இதே காலத்தில் 12 கிராண்ட்ஸ்லாம் வென்றிருப்பதால், "ஆண் விளையாட்டு வீரர்" என்று பிரிட்டன் டென்னிஸ் நட்சத்திரமான ஆன்டி மெர்ரி அந்த பத்திரிகையாளரை திருத்தினார் .

"இதுதான் ஆன்டி மெர்ரி. இதைத்தான் அவரிடம் நாங்கள் விரும்புகிறோம்" என்று 35 வயதான அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

உலக தர வரிசையில் 4வது இடத்தில் இருக்கும் செரீனா, ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தன்னுடைய சகோதரி வீனஸை வென்றபோது, 23 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்று வரலாற்று பதிவை உருவாக்கினார்.

படத்தின் காப்புரிமை Joe Toth - AELTC Pool/Getty Images

இலையுதிர் காலத்தில் தனக்கு குழந்தை பிறக்க இருப்பதால், இந்த ஆண்டு இருக்கின்ற போட்டிகளில் விளையாட முடியாமல் போகும் என்று செரீனா ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

இஎஸ்பிஎன் தொலைக்காட்சியில் 'த சிக்ஸ்' நிகழ்ச்சியில் பேசிய செரீனா, "ஆன்டி மெர்ரிக்கு முழு ஆதரவு அளிக்காத விளையாட்டு வீராங்கனை ஒருவர் இருக்கிறார் என்று நான் எண்ணவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

"அவர் விளையாட்டில் குறிப்பாக டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் பெண்களின் பிரச்சனைக்காக, பெண்களின் உரிமைகளுக்காக எப்போதும் பேசி வருகிறார். அவர் அதனை இப்போதும் செய்திருக்கிறார்" என்று செரீனா குறிப்பிட்டுள்ளார்.

"அவருக்கு தலைசிறந்த தாய் ஒருவர் கிடைத்துள்ளார். அவருடைய வாழ்வில் இந்த தாய் வலிமையான நபராக இருக்கிறார். எங்களுடைய இந்த விளையாட்டு போட்டியின்போது, மர்ரி மேலான செயல்களை செய்திருக்கிறார். நாங்கள் அவரை மிகவும் விரும்புகிறோம்" என்று செரீனா தெரிவித்திருக்கிறார்.

"பெண்களின் உரிமைகளுக்காக ஆன்டி மர்ரி பேசுபவர். அவருடைய பயிற்சி காலத்தில் பெரும்பாலும் பெண் பயிற்சியாளர் பெற்றிருந்தது இதற்கு உதவியது. ஆனால், பெண்களுக்கு உதவுவதற்கு அவருடைய பங்கினை மர்ரி செய்து வருகிறார்" என்று உலக தர வரிசை பட்டியலில் முதலிடத்திலுள்ள ஆன்டி மர்ரியின் தாய் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :