ரோஜர் பெடரர் 8-ஆவது விம்பிள்டன் வரலாறு படைக்க வாய்ப்பு

ரோஜர் பெடரர் 8வது விம்பிள்டன் பெற்று வரலாறு படைக்க வாய்ப்பு படத்தின் காப்புரிமை Julian Finney/Getty Images

இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றால், விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை இந்த கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவார்.

மரின் சிலிக்கிற்கு எதிராக இன்று மோதும் ரோஜர் பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில்,வெற்றிபெற்றால் 2000-ஆவது ஆண்டு பீட் சாம்ப்ராஸூம், 1889 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்திருக்கும் சாதனையை முடியடித்து வரலாறு படைக்கலாம்.

படத்தின் காப்புரிமை Gareth Fuller - Pool/Getty Images

கடந்த ஆண்டு ரோஜர் பெடரருக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், 28 வயதான சிலிக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மூன்று முறை நெருங்கி வந்தது. ஆனால், இறுதியில், கடைசி மூன்று செட்களிலும் வெற்றி பெற்று ரோஜர் போட்டியில் வென்றார்.

2014 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை வென்றதோடு, விம்பிள்டன் சாதனையும் சேரும் என்று சிலிக் நம்பிக்கையுடன் இன்று களத்தில் இறங்கவுள்ளார்.

படத்தின் காப்புரிமை GLYN KIRK/AFP/Getty Images

“விம்பிள்டன் டென்னிஸில் வலாறு படைப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ரோஜர் பெடரர் தெரிவித்திருக்கிறார்.

"இது மிகப் பெரிய விடயம். இந்தப் போட்டியை நாம் மிகவும் விரும்புகிறேன். டென்னிஸ் வீரராக என்னுடைய கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன. 8வது விம்பிள்டன் கோப்பையை வெல்வதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு நேரம் மிகவும் நெருங்கி வந்திருப்பது சிறந்த உணர்வை தருகிறது" என்று ரோஜர் பெடரர் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்திற்கு பிறகு, கலப்பு இரட்டையர் டென்னிஸ் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

படத்தின் காப்புரிமை Julian Finney/Getty Images

இதில் ஜமியே மர்ரி மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்டீனா ஹிங்கிஸ் ஜோடி தற்போதைய சம்பியன்கள் ஹீத்தர் வாட்சன் மற்றும் பின்லாந்தை சேர்ந்த ஹென்ரி கோன்டினென் ஜோடியோடு மோதுகின்றது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றதன் மூலம் தன்னுடைய 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் வெல்வதற்கு ரோஜர் பெடரர் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பின்னர் ஆறு மாதத்தில் 19வது கிராண்ட்ஸலாம் வெல்லும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார்.

தொடர்படைய செய்திகள்

விம்பிள்டன் மத்திய விளையாட்டு திடலில் ஆஸ்திரேலியாவின் மர்ர்க் பிலிப்பௌஸ்ஸிஸை ரோஜர் பெடரர் தேற்கடித்து முதல் கிராண்ட்ஸ்லாமை வென்று 14 ஆண்டுகள் ஆகின்றன. ரோஜர் பெடரர் அன்டி மெர்ரியை தோற்கடித்து தன்னுடைய கடைசி விம்பிள்டன் கோப்பையை வென்று 5 ஆண்டுகள் ஆகின்றன.

"உண்மையாக சொன்னால். இந்த ஆண்டுகளை (2012) மிகவும் நீண்ட காலம் என்று நான் உணரவில்லை" என்று ரோஜர் பெடரர் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :