”மித்தாலிக்கு நாங்கள் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை” சொல்கிறார் மித்தாலி ராஜின் தாய்

மித்தாலி

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை எட்டியிருக்கும் இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் பெற்றோர் தங்கள் மகளின் தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது குறித்து பிபிசி தமிழுக்காக தீப்தி பதினியிடம் பகிர்ந்து கொண்டனர்.

"முதல் நான்கு இடங்களை பிடித்ததே மிக முக்கியம் எனக்கு உன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் அணியில் அனைவரும் இளம் வயதினராக இருப்பதால், அவர்களை நீ வழிநடத்தி வெற்றி பெற வேண்டும்" என்று அரை இறுதி போட்டிக்குமுன் தன்னிடன் பேசிய மித்தாலியிடம் தெரிவித்ததாக கூறுகிறார் அவரின் தந்தை துரை ராஜ்.

ஒவ்வொரு முக்கிய ஆட்டத்திற்கு முன்பு கடைபிடிக்கும் குறிப்பிட்ட பழக்கம் எதாவது உண்டா என்று மித்தாலியின் தாயார் லீலா ராஜிடம் கேட்டதற்கு,

லீக் போட்டியாக இருந்தாலும் உலக கோப்பை போட்டியாக இருந்தாலும் 100 சதவீத முயற்சியை நீ கொடுக்க வேண்டும் என்றுதான் சிறுவயதிலிருந்து மித்தாலிக்கு சொல்லிக் கொடுத்தோம் என்றார் அவர்.

படக்குறிப்பு,

மித்தாலியின் பெற்றோர்

உலக கோப்பை என்பதால் அது சிறப்பான போட்டி என்றெல்லாம் நாங்கள் எந்த ஒரு அழுத்தமும் மித்தாலிக்கு கொடுக்கவில்லை என்று,ம் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மட்டும்தான் கூறுவேன் என்கிறார் தாய் லீலா.

மித்தாலி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில், பெண்கள் கிரிக்கெட் ஆடுவதற்கு பெரிய ஆதரவு இல்லை; உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மித்தாலியை கிரிக்கெட் பயிற்சியில் விடுவது மூலம் காலத்தை வீணடிப்பதாக பேசினார்கள். ஆனால் அனைத்தையும் கடந்து மித்தாலி நல்ல முறையில் செயல்பட்டு வந்தார்.

ஆனால், இன்று 20 வருடங்கள் கழித்து பெண்கள் விளையாட்டில் தற்போது நான் நல்ல மாற்றத்தை காண்கிறேன் என்றார் துரை ராஜ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :