மகளிர் உலக கோப்பை இறுதியாட்டம்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி 42 ஓவர்களின் இறுதியில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.

தொடக்கத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரார்கள் வின்ஃபீல்ட் மற்றும் பேமவுண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தனர்.

பட மூலாதாரம், Reuters

வின்ஃபீல்ட்டின் விக்கெட்டை இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ராஜேஸ்வரி காயக்வாட் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் 1 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

முன்னதாக வியாழக்கிழமையன்று டெர்பியில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், வியாழக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் நுழைந்தது.

அரையிறுதி போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். 115 பந்துகளில் 20 பவுண்டரிகள், 7 சிக்சர் உதவியுடன் 171 ரன்களை விளாசினார் கவுர்.

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இறுதியாட்டத்தில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் முனைப்பாக உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்