'அடுத்த உலகக்கோப்பைக்கு அணியில் இருக்க மாட்டேன்': மித்தாலி ராஜ் வருத்தம்

அடுத்த உலகக்கோப்பைக்கு நான் அணியில் இருக்க மாட்டேன்: மித்தாலி ராஜ் வருத்த

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

''அடுத்த உலகக்கோப்பைக்கு நான் அணியில் இருக்க மாட்டேன்''

கிரிக்கெட் அணியில் உள்ள தனது சக உறுப்பினர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும், அடுத்த உலகக்கோப்பைக்கு நான் அணியில் இருக்க மாட்டேன் என்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசாத்தில் இங்கிலாந்து அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டம் குறித்தும், அணியின் செயல்பாடு குறித்தும் பேசிய இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், ''உலக கோப்பையின் இறுதிப்போட்டி வரை முன்னேறி வந்தது குறித்து பெருமைப்படுகிறேன். இரு அணிகளுக்கு இடையே சமநிலையான போட்டி இருந்து வந்தது. என்னுடைய அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.'' என்றார்.

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியை காண திரண்ட ரசிகர்களுக்கு நன்றி கூறிய மித்தாலி, ரசிகர்களின் இந்த ஆதரவுதான் பெண்களுக்கு மேலும் ஊக்கம் தரும் என்றார்.

இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், பெரும்பாலான இந்திய வீராங்கனைகளுக்கு இது முதல் ஃபைனல் போட்டி என்பதால் அவர்களுக்கு போதிய அனுபவமில்லை என்றும் அவர் கூறினார்.

இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டில் தொடர்வேன் என்று கூறிய அவர், அடுத்த உலகக்கோப்பையின் போது நான் அணியில் இருக்க மாட்டேன் என்றார்.

இந்தியா திரும்பும் போது எங்களை பெருமையுடன் பார்ப்பார்கள் என்றும், மகளிர் கிரிக்கெட்டிற்கு மேலும் ஆதரவு பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் மித்தாலி ராஜ் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்