உசைன் போல்ட்: 8 முறை ஒலிம்பிக் சாம்பியனின் சாதனை பயணம் (9.58 வினாடிகள்) வரைபடங்களில்

அனைத்து காலகட்டங்களிலும், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று உலகெங்கும் பரவலாக உசைன் போல்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
தற்போது லண்டனில் நடைப்பெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பிறகு ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் ஏன் ஒரு சாதனையாளராக கருதப்படுகிறார் என்பதையும், அவர் எவ்வாறு சாதனை நிகழ்த்தினார் என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.
1
உசைன் போல்ட் வரலாற்றின் மிக அதிக வேக மனிதர் என்று கருதப்படுகிறார். 100 மீட்டர் ஒட்டப் பிரிவில், கடந்த காலங்களில் மூன்றுமுறை புதிய சாதனைகள் நிகழ்த்தியுள்ளார் போல்ட்.
9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்
கடந்த 2008 மே மாதத்தில் நடந்த போட்டியில், தனது சக போட்டியாளர் அஸாஃபா பவலின் 9.74 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து 9.72 வினாடிகளில் பந்தய தூரத்தை போல்ட் கடந்தார்.
அதே ஆண்டில் நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில், 9.69 வினாடிகளில் பந்தய தூரத்தை போல்ட் கடந்தார். பின்னர், தனது இந்த சாதனையையும் முறியடித்த உசைன் போல்ட், 2009-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 9.58 வினாடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்தார்.
அதே வேளையில், கடந்த 1912-இல் விளையாட்டு உலகின் புதிய அதிகார அமைப்பான ஐஏஏஎஃப் அமைப்பால், 10.6 வினாடிகளில் பந்தய தூரத்தை அமெரிக்க வீரர் டொனால்ட் லிப்பின்காட் எட்டியது முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டது.
2
மற்ற போட்டியாளர்களுக்கும், உசைன் போல்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?
3
100 மீட்டர் ஓட்டத்தில் மட்டுமல்ல, 200 மீட்டர் ஒட்டப் போட்டியிலும், உசைன் போல்ட் சிறப்பாக பங்களித்துள்ளார். இந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை உசைன் போல்ட் செய்திருப்பது மற்றுமொரு சிறப்பு.
2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில், 200 மீட்டர் ஒட்டப்பிரிவில், அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சனின் 12 ஆண்டு சாதனையாக இருந்த 19.32 வினாடிகள் என்பதை முறியடித்து, 19.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து உசைன் போல்ட் புதிய சாதனை படைத்தார்.
இதற்கு அடுத்த ஆண்டில் பெர்லினில் நடந்த போட்டியில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டிய போல்ட் , மேலும் ஒரு சாதனை படைத்தார்.
4
நம்பமுடியாத அளவுக்கு, எப்போதும் சீரான மற்றும் அதிவேக பாணி கொண்டவர் உசைன் போல்ட்.
5
தனது நாட்டவரான யோஹான் பிளேக்கால், 2012-ஆம் ஆண்டின் ஜமைக்கா தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளால் தோற்கடிக்கப்பட்டது மட்டும்தான், 2008-ஆம் ஆண்டு முதல், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் உசைன் போல்ட் தோல்வியுற்ற ஒரே போட்டியாகும்.
6
நாம் நினைத்து பார்ப்பதைவிட வேகமாக ஓடக்கூடியவர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் 10 மீட்டர் தூரத்தை 0.81 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார் உசைன் போல்ட்.
7
எவ்வாறு இவ்வளவு சாதனைகளை உசைன் போல்ட் நிகழ்த்துகிறார்?
ஜர்னல் ஆஃப் ஹீமன் கைனடிகிஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 6 அடி 5 அங்குலம் என்ற அவரது அசாத்திய உயரம் மற்ற போட்டியாளர்களைவிட அவரை சாதனை படைக்க உதவுவதாக குறிப்பிட்டுள்ளது.
8
உலகின் அதி வேக மனிதர் உசைன் போல்ட் என்பதற்கு காரணம் என்ன ? உசைன் போல்டின் இந்த மின்னல் வேகத்துக்கு காரணமென்ன? விளக்குகிறது இந்த வரைபடம்.
9
ஆரம்பத்தில் சற்றே தாமதமாக ஆரம்பித்த தருணங்களிலும், அசாத்திய மற்றும் சீரான வேகம் கொண்டு சமாளித்து வெற்றி பெற்றுள்ளார் உசைன் போல்ட்.
9.58
எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓட்டப்போட்டியை வென்று "தடகள ஜம்பவான்" என்ற பெருமையை எளிதாக வென்றார்.
100 மீட்டர், 200 மீட்டர், மற்றும் 4x100 தொடர் ஓட்டம் ஆகிய மூன்றிலும் பெய்ஜிங் 2008, லண்டன் 2012, ரியோ 2016 என கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் போல்ட் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் ஏரளாமான மக்கள் உசைன் போல்ட்டை பின்தொடர்கின்றனர். ஓய்வுபெற்ற பின்னர் உசைன் போல்ட் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.
அண்மையில், ஐ ஏஏஎஃப் அமைப்பின் தலைவர் லார்ட் கோ பிபிசியிடம் தெரிவித்தபடி, ''உசைன் போல்டின் ஆளுமையை நாம் கண்டிப்பாக இழப்போம். ஆளுமையுள்ள வீரர்களை நாங்கள் எப்போதும் விரும்புவோம்'' என்று தெரிவித்திருந்தார்.
விளையாட்டு உலகம் உசைன் போல்ட்டையும், களத்தில் அவரது ஆளுமையயும் நிச்சயமாக இழக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்