முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள் (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption பிரிட்டனின் ஏங்கெல்லா காப்சன் (70வயது) பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய உலக சாதனையை படைக்க ஓடுகிறார். 44'25'' நேரத்தில் பந்தய தூரத்தை கடந்துள்ளார்.

உலகின் மிக சிறந்த தடகள வீரர்கள் லண்டனில் கொண்டாடப்படும் வேளையில், அவர்களுடைய பழைய சகாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால், இந்த இருதரப்பினரும் தங்களது வயது என்ற விஷயத்தில் மட்டும் முற்றிலும் எதிரெதிராக இருந்தாலும், விளையாட்டின் மீதான ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றில் ஒருதரப்பினருக்கு மற்றொருவர் சளைத்தவர்களல்ல.

68 வயதுடைய புகைப்பட கலைஞர் அலெக்ஸ் ரோடாஸ் அதனை நிரூபிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

'' அதிசயமான இந்த தடகள வீரர்களை பார்த்தவுடன் பாதி கண்ணீரிலும், பாதி ஆச்சரியத்திலும் இருக்கிறேன். 60களில், 70களில் மற்றும் 90களில் இவர்கள் செய்த சாதனையை நினைத்து பார்க்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது,'' என்கிறார் பிரிஸ்டலை சேர்ந்த புகைப்பட கலைஞர்.

டென்மார்கில் உள்ள ஹாரஸில் நடைபெற்ற ஐரோப்பிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கெடுத்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார் அலெக்ஸ்.

அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption நீளம் தாண்டும் போட்டியில் ஃபின்லாந்தை சேர்ந்த 87 வயதுடைய அகி லுண்ட் 2.77 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption டென்மார்க்கை சேர்ந்த 87 வயதாகும் ரோஸா பெடர்சன் பெண்களுக்கான நீளம் தாண்டும் போட்டியில் 2.72 மீட்டர் கடந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption எஸ்டோனியாவை சேர்ந்த இந்த 91 வயதுடைய ஹில்ஜா பக்ஹோஃப் பெண்களுக்கான எடை தூக்கி எறியும் போட்டியில் சுமார் 8.08 மீட்டர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனையை படைந்துள்ளார்.
படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption ஆண்களுக்கான 300 மீட்டர் தடையோட்ட போட்டியில் 71 வயதாகும் பிரிட்டனின் பேரி ஃபெர்குசன் மற்றும் 72 வயதாகும் ஜெர்மனியின் ஹார்ட்மன் நார் இலக்கை நோக்கி முன்னேறுகின்றனர்.
படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption 79 வயதாகும் லத்வியாவின் லியோன்டைன் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption 91 வயதாகும் பிரிட்டனின் தல்பீர் சிங் தியோல், 90 வயதாகும் நார்வேவின் ஹரால்ட் ஆல்ஃபிரெட் ஆனருடை முந்தி முன்னிலையில் இருக்க 86 வயதாகும் ஜெர்மனியை சேர்ந்த எர்னஸ்ட் ஸுபெர் கால் தடுமாறி கீழே விழுந்த காட்சி.
படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption 74 வயதாகும் ஆஸ்திரியாவின் மரியன் மெய்யர் பெண்களுக்கான ஷாட் புட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெறும் முயற்சியில் 9.80 மீட்டர் தூரத்திற்கு வீசினார்.
படத்தின் காப்புரிமை Alex Rotas
Image caption ''மூத்த விளையாட்டு வீரர்களை புகைப்படம் எடுப்பதை முதன்மையாக கொண்டுள்ள புகைப்பட பணியை எனது 60களில் நான் செய்து வருகிறேன்'' என்கிறார் அலெக்ஸ் ரோடாஸ்.

பிற செய்திகள்:

அதிர்ச்சியில் முடிந்த உசைன் போல்டின் சாதனை பயணம்: காரணம் என்ன?

மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்

106 ஆண்டுகள் பழமையான 'பழ கேக்' அண்டார்டிகாவில் கண்டெடுப்பு

அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீச்சல் குளத்தில் ரக்பி பயிற்சி; மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்

இந்தச் செய்தி குறித்து மேலும்

தொடர்புடைய இணைய இணைப்புகள்

வெளியார் இணைய தளங்களில் உள்ள விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது