இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பதவி விலகல்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA/AFP/Getty Images

சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரஞ்சித் மதுரசிங்க, ரமேஷ் களுவிதாரன, அசங்க குருசிங்க மற்றும் எரிக் உபசாந் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சனத் ஜயசூரிய உள்ளிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கை அணி சமீபத்தில் சந்தித்துள்ள பின்னடைவு குறித்து தேர்வாளர்கள் மீதும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீதும் பல்வேறு தரப்பும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இது தொடர்பாக கடுமையான அழுத்தங்களும் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை அனுப்பியிருப்பதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்