கொல்கத்தா கிரிக்கெட்: இந்தியாவின் அசத்தல் வெற்றி எப்படி சாத்தியமானது?

  • 22 செப்டம்பர் 2017

வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

படத்தின் காப்புரிமை Reuters

மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2:0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்து மொத்தம் 252 ரன்களே இந்தியா எடுத்திருந்தாலும், 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது எவ்வாறு என்று பார்ப்போம்:

  • இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான லோஹித் ஷர்மா 7 ரன்களே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தாலும், ரஹானேயுடன் (55 ஓட்டங்கள்) ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (92) பொறுப்பாக ஆடி அணியின் ரன்கள் எண்ணிக்கை உயர உதவினார்.
  • இந்திய அணியில் 5 பேர் தாங்கள் பெற்ற ரன்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டாத நிலையிலும், ஜாதவ் (24 ரன்), பாண்டியா, குமார் (தலா 20 ரன்), பும்ரா (10 ரன்) ஆகியோர் எடுத்த ரன்கள், ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா குறைந்தபட்ச நெருக்கடியை கொடுக்க உதவியதை மறுக்க முடியாது
படத்தின் காப்புரிமை Getty Images
  • 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் கண்ட ஆஸ்திரேலிய அணிக்கு, தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தலா 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறியது அந்த அணிக்கு பெரும் நெருக்கடியை எற்படுத்தியது.
  • ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பொறுப்பாக ஆடி 59 ரன்களும், ஹெட் 39 ரன்களும், எடுத்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் தனிமனிதனாக பேராடிய ஸ்டாய்னிஸ் எடுத்த 62 ரன்களும், அந்த அணியினர் வெற்றி கனியை சுவைக்க பயன்படவில்லை.
படத்தின் காப்புரிமை Getty Images
  • இந்த ஆட்டத்தின் 33வது ஓவரில் சிறப்பாக பந்து வீசிய இந்தியாவின் குல்தீப் யாதவ், தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை சரித்தது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அதுவரை 7 ஓவர்கள் வீசியிருந்த குல்தீப் யாதவ் 39 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ஆஸ்திரேலிய வீரர்களில் எழு பேர் ரன்கள் எடுக்காமல் அல்லது சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியது, 43.1 ஓவரிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் சரணடைய வேண்டிய நிலைமையை ஏற்படுத்திவிட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :