இலங்கை தொடர்: இந்திய அணியில் மீண்டும் முரளி விஜய், அஸ்வின்

இந்திய அணி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய அணி

இலங்கை அணி இந்திய மண்ணில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.

காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் இடத்துக்கு முரளி விஜய் அணிக்கு திரும்பியதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான அபினவ் முகுந்த் நீக்கப்பட்டுள்ளார். இஷாந்த் ஷர்மாவுக்கு மீண்டும் அணியில் இடம்கொடுத்துள்ளது பிசிசிஐ.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான 16 வீரர்கள் கொண்ட பட்டியல்:-

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் திவான், கே. எல்.ராகுல், முரளி விஜய், சதீஸ்வர் புஜாரா, அஜின்கியா ரகானே (துணை கேப்டன்), ரோஹித் ஷர்மா, விருத்திமான் சாகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா.

நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து - இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் அணியை அறிவித்திருக்கிறது பிசிசிஐ. இதில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய மூத்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் முதல் முறையாக டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துடனான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:-

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் திவான், கே. எல்.ராகுல், ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி , குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யுவேந்திர சாஹல், ஆசிஷ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிட் பும்ரா, முகமது சிராஜ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்