சிக்ஸர்கள் விளாசும் விராட் கோலிக்கு பிறந்தநாள்: என்ன சொல்கிறது சமூக ஊடகம்?

விராட் கோலி படத்தின் காப்புரிமை Getty Images

சச்சின் கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்தபோது, டெல்லியிலிருந்து புயல் போல புறப்பட்ட விராட் கோலி, பல போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார். கிரிக்கெட் உலகில் சிலர் தங்கள் வாழ்நாளில் சாதித்ததை, தனது 29-ஆவது வயதிலேயே விராட் சாதித்துள்ளார். குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில்.

ஒரு நாள் விளையாட்டு போட்டிகளில் அதிக சதங்களை குவித்தவர்கள் பட்டியலில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் சச்சின்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விராட் கோலி

தம்மை விமர்சிப்பவர்களுக்கு பவுண்டரிகளாலும், சிக்ஸர்களாலும் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் விராட்டுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாள். அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து குவிகிறது. விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிவிட்டரில் #HappyBirthdayVirat என்ற ஹாஷ்டாக் காலை முதலே டிரண்டில் இருக்கிறது.ஒருசிலர் விராட்டின் சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூற, சிலர் அவரது சாதனைகளை பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

விராட்டுக்கு குவிந்த வாழ்த்துகளின் தொகுப்பு:

விவிஎஸ் லட்சுமணனின் வாழ்த்து

திரைப்பட நடிகர் விவேக் ஓப்ராயின் வாழ்த்து

சுதர்சன் பட்நாயக்கின் மணல் ஓவியம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியின் வாழ்த்து

பிசிசிஐ-ன் வாழ்த்து

சச்சினின் வாழ்த்து

ஒரு ரசிகை வரைந்த விராட்டின் படம்

ஒரு ரசிகர் பகிர்ந்திருக்கும் விராட்டின் சிறுவயது புகைப்பட தொகுப்பு:

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்