ஆசிய கோப்பையை கைப்பற்றி இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை

ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை

பட மூலாதாரம், HockeyIndia

படக்குறிப்பு,

ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை

இந்திய பெண்கள் ஹாக்கி அணி சீனாவை வீழ்த்தி மகளிர் ஆசிய கோப்பை 2017-ஐ கைப்பற்றி உள்ளது.

இந்த போட்டி ஜப்பானின் காகமிகாஹரா காவாஸகி மைதானத்தில் நடந்தது.

ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பின் இந்த கோப்பையை மீண்டும் இந்திய மகளிர் ஹாக்கி அணி கைப்பற்றி உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மகளிர் உலக கோப்பை போட்டிக்கு இந்த அணி நேரடியாக தேர்வாகி உள்ளது.

இந்திய அணியின் தலைவர் ராணி கடைசி கோலை அடித்தும், இந்திய அணியின் கோல்கீப்பர் சவிதா எதிர் அணி அடிக்க முயன்ற கோலை தடுத்தும் இந்த வெற்றியை சாத்தியமாக்கினர். இதன் மூலம் இந்தியா 5-4 என்ற கணக்கில் வென்றுள்ளது.

வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :