ஊக்க மருந்து சர்ச்சை: குளிர்கால ஒலிம்பிக்ஸில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

  • 6 டிசம்பர் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.

ஆனால், ஊக்க மருந்து சோதனையை எதிர்கொண்டு தங்களை நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நடுநிலை கொடியுடன் ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சூச்சி நகரில் ரஷ்யா சார்பில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் அரசு ஆதரவுப்பெற்ற ஊக்க மருந்து பயன்பாடு இருந்தததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையையடுத்து சர்வதேச ஒலிம்பிக் குழு இதனை அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு தொடர் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளில் இந்த தடை உத்தரவு ஒரு எல்லை வரம்பை குறிக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Clive Mason

ஒலிம்பிக் குழுவின் தடை உத்தரவு ரஷ்யாவில் பரவலான கண்டனங்களை எதிர்கொண்டுள்ளன.

ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். அதேசமயம், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் ஊக்க மருந்து சோதனையை நிரூபிக்கும் முடிவை பிற அதிகாரிகள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :