கிரிக்கெட்: டி20 தொடரை இந்தியா 'ஒயிட்வாஷ்' செய்தது எப்படி? - 5 முக்கிய காரணங்கள்

மும்பையில் ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 3-0 என்று டி20 தொடரை கைப்பற்றியது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்று வென்ற இந்தியா, டி20 தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்தியாவின் அபார தொடர் வெற்றி குறித்த 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

தன்னம்பிக்கையின்றி காணப்பட்ட இலங்கை அணி

டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியில் தோற்று இரண்டு டெஸ்ட்களை சமன் செய்த இலங்கை, ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்று தோல்வியடைந்தது. இதனால் சற்றே நம்பிக்கை குறைவுடன் காணப்பட்ட இலங்கை அணியால் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

இந்த தொடரில் மட்டைவீச்சு மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு அம்சங்களிலும் இலங்கை சிறப்பாக செயல்படவில்லை.

இந்திய மட்டைவீச்சாளர்களின் அதிரடி

படத்தின் காப்புரிமை TWITTER/@BCCI
Image caption 35 பந்துகளில் சதமடித்த ரோகித் சர்மா

இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேனான ரோகித்சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இந்த போட்டியில் 88 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இளம் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

மூன்றாவது டி20 போட்டியில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறாத சூழலிலும், இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் நன்றாக பங்களித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். இளம் பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் உனட்கட் ஆகிய இருவரும் மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினர்.

வியூகம் வகுக்க தவறிய இலங்கை

டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரு தொடர்களிலும் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இலங்கை மட்டை வீச்சாளர்கள் பெரிதும் தடுமாறினர். இதனால் பல போட்டிகளிலும் இலங்கை அணியால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters

இந்திய பந்துவீச்சாளர்களை சந்திக்க எந்த வியூகத்தையும் இலங்கை அணி வீரர்கள் வகுக்கவில்லை.

ரோகித் சர்மாவின் தலைமை

படத்தின் காப்புரிமை PTI

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி இல்லாத நிலையில், தலைமை தாங்கிய ரோகித் சர்மா சிறப்பாக அணியை சிறப்பாக வழிநடத்தினார். பந்துவீச்சை மாற்றுவது மற்றும், பேட்டிங் வரிசை மாற்றம் ஆகியவற்றில் பல போட்டிகளிலும் ரோகித் சர்மா ஏற்படுத்திய மாற்றங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்