ஐசிசி விருது வென்ற விராட் கோலி சினம் அடைந்தது என்?

  • பரத் ஷர்மா,
  • பிபிசி இந்தி

கடந்த ஜனவரி 5-ஆம் தேதிக்கு முன்னர், ஒரு விளையாட்டு தொலைக்காட்சி சேனலில் வெளிவந்த விளம்பரம், 25 ஆண்டுகளாக காயமடைந்த நாம் இப்போது பழிவாங்க வேண்டும் என்று கூறியது.

பட மூலாதாரம், AFP

ஜனவரி 17-ஆம் தேதியன்று தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிராக செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2-0 என்று டெஸ்ட் தொடரை இழந்தவுடன், இந்த காயம் ஆற இன்னும் நாளாகும் என்று புலப்படுகிறது.

ஆம், இது தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா- தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் தொடர் பற்றிய விவாதம்தான் இது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

புவனேஷ்வர் குமார்

டெஸ்ட் தொடரை 2-0 என்று இழந்துள்ளது இந்தியா. இந்த தொடர் ஆரம்பிக்கும்முன், இம்முறை தொடரை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. ஏனெனில், ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல தேவையான 20 விக்கெட்டுகளை பெற வலுவான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதாக கூறப்பட்டது.

பந்துவீச்சாளர்கள் பலம்; மட்டைவீச்சாளர்கள் பலவீனம்

உண்மைதான், நல்ல பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தாலும், வெற்றி பெற பேட்ஸ்மேன்களும் தேவையே. இந்த தொடரை இந்திய இழந்ததற்கு காரணம் அவர்களே.

செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி கூறுகையில், ''மீண்டும் ஒருமுறை எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களின் கடமையை செய்துள்ளனர். ஆனால், பேட்ஸ்மேன்கள் ஏமாற்றமளிக்கின்றார். அதனாலே நங்கள் தோல்வியடைந்தோம்'' என்று தெரிவித்தார்.

தொடரை இழந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சில சமயங்களில் விராட் கோலி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர் குமாருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடாத ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படாதது குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

சினம் கொண்ட கோலி - ஏன்?

சில கட்டங்களில், விராட் கோலியால் அவரது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், AFP

எத்தனை முறை வெளிநாடுகளில் இந்தியா தோல்வியடைந்தது என்று கேட்டபோது, 'அண்மையில் நாங்கள் 21 முறைகள் வென்றுளோம். 2 முறைதான் தோற்றோம்' என பதிலளித்தார்.

வெற்றி பெற்றதில் எத்தனை போட்டிகள் வெளிநாட்டு மண்ணில் என மறுபடியும் கேட்கப்பட்டபோது , 'ஒவ்வொரு முறையும் வெல்வதற்கே நாங்கள் போராடுகிறோம்.நான் இங்கு வந்தது உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க, உங்களுடன் சண்டை போட அல்ல' என்று ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும், தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் பிட்ச்கள் குறித்து கோலி சில கருத்துக்களை தெரிவித்தார்.

'கேப்டவுன் மைதான பிட்ச் குறித்து நாங்கள் எந்த புகார் தெரிவிக்கவில்லை. போட்டியில் வெல்ல தங்களின் பங்கை செய்தோமோ என்று அனைத்து வீரர்களும் தங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அணிக்கு கோலியின் பங்களிப்பு என்ன?

பட மூலாதாரம், AFP

கோலியின் கோபத்தில் இருந்து ஓவ்வொரு போட்டியிலும் அணி வெற்றி பெற அவர் உறுதியாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இந்த தொடரில் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அவர் எடுத்த 153 ரன்கள் மட்டுமே அவரது சிறப்பான பங்களிப்பு. மற்ற இன்னிங்க்ஸ்களில் அவர் சொற்ப ரன்களில் அவர் ஆட்டமிழந்துள்ளார்.

செஞ்சூரியன் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 141 ரன்களை மட்டுமே எடுக்க, அதில் கோலியின் பங்கு 5 ரன்களே.

செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகள் அவரை சங்கடப்படுத்தியிருந்தாலும், அனைத்தையும் அவரால் புறந்தள்ளிவிட முடியாது. தென் ஆஃப்ரிக்காவில் இதுவரை எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வெல்ல முடியவில்லை என்ற கசப்பான உண்மையை மறந்துவிட முடியாது.

உள்ளூரில் அமோக வெற்றி; வெளிநாட்டில் படுதோல்வி

2011-ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு மாநில இந்தியா தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.2011-12 தொடரில் இங்கிலாந்தில் 4-0 என்று தோற்ற இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியாவிலும் 4-0 என தோல்வியடைந்தது. பின்னர், நியூஸிலாந்துக்கு எதிராக 2013-14ல் நடந்த தொடரில் 1-0 எனவும், இங்கிலாந்துக்கு எதிராக 2014ல் நடந்த தொடரில் 3-1 எனவும், 2014-15 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 2-0 எனவும் இந்தியா தோல்வியடைந்தது.

பட மூலாதாரம், Getty Images

ஆசியாவுக்கு வெளியே இந்தியா மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களில் பெரும்பாலும் தோல்வியே கிடைத்துள்ளது.

2015 இலங்கை சுற்றுப்பயணம் தொடங்கி ஆசியாவில் 9 டெஸ்ட் தொடர்களை வென்ற இந்தியாவுக்கு வெளிநாடுகளில் மட்டும் தோல்வி கிடைப்பது ஏன்?

அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்கள் இந்த நடப்பு தொடரில் தொடர்ந்து சரியாக பங்களிக்காதது அணியின் தொலைவுக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.

ரஹானே வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும், அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், AFP

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி தொடர்களில் ஜாம்பவானாக திகழும் ரோகித், வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறுகிறார்.

அவர் வெளிநாடுகளில் இதுவரை விளையாடிய 16 டெஸ்ட் போட்டிகளில் அவரது மட்டைவீச்சு சராசரி 25.35 மட்டுமே.

இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்படாதது குறித்தும்,ரஹானேவுக்கு வாய்ப்பளிக்காதது குறித்தும் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2017 ஐசிசி விருது பெற்ற கோலி

இதனிடையே, ஐசிசியால் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளதுதான் தற்போதைய தருணத்தில் இந்திய அணிக்கு ஆறுதலாக அமைகிறது.

பட மூலாதாரம், Icc-cricket.com

படக்குறிப்பு,

ஐசிசி விருது வென்ற விராட் கோலி

மேலும், 2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அணியிலும் விராட் கோலி இடம்பெற்றுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :