அப்பா எனக்கு உதவினார், ஆனால் கட்டாயப்படுத்தவில்லை: சச்சின் டெண்டுல்கர் மகன்

தனது குழந்தைப் பருவத்தில் கால்பந்து, நீச்சல், டேக்வாண்டோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கவனம் செலுத்தியதாகவும், கிரிக்கெட் அவற்றை முந்திக்கொண்டதாகவும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை ABC

பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து..

கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வளர்ப்பதில் உங்கள் அப்பாவின் பங்கு என்ன?

என் அப்பா எனக்கு மிகவும் உதவினார். ஆனால், அவர் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை.

கிரிக்கெட்டை தொழில்முறையாக விளையாடப் போகிறீர்களா?

ஆம். அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதுதான் என் கனவு.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதையும் தாண்டி, இவ்வளவு பெரிய நாட்டில் ஓர் ஐ.பி.எல் அணியில் இடம் பிடிப்பது எவ்வளவு கடினமானது?

அது மிகவும் கடினம். தேர்வு செய்யப்படுவதற்காக நீங்கள் பரிசீலிக்கப்படவே நீங்கள் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும். ஓரிரு தொடர்களில் மோசமாக விளையாடினாலும் நீங்கள் அவ்வளவுதான்.

படத்தின் காப்புரிமை ABC
Image caption அர்ஜுன் டெண்டுல்கர்

ஒரு பந்து வீச்சாளராவது குறித்து பரிசீலித்துள்ளீர்களா?

நான் இப்போது உயரமாகவும் வலிமையாகவும் வளர்ந்துள்ளேன். என் குழந்தைப் பருவத்தில் வேகமாக பந்து வீசுவதை விரும்பியுள்ளேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராவது குறித்தும் நான் சிந்தித்துள்ளேன். வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் அதிகம் இல்லை.

கிரிக்கெட் குறித்து உங்கள் அப்பா உங்களுக்கு அளித்த மிகச்சிறந்த அறிவுரை எது?

அச்சமின்றி விளையாட வேண்டும் என்றும் அணிக்காக விளையாட வேண்டும் என்றும் அவர் என்னிடம் கூறியுள்ளார். உன்னால் ஆனதை அணிக்காக கொடுக்க வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் பெயரால் நீங்கள் உங்களை எவ்வளவு அதிகமாக நிரூபிக்க வேண்டியுள்ளது?

அந்த அழுத்தத்தை நான் உள்வாங்கிக்கொள்வதில்லை. பந்து வீசும்போது சிறப்பாக பந்துவீசுவது குறித்தும், பேட் செய்யும்போது பந்தை சிறப்பாக எதிர்கொள்வது குறித்து மட்டுமே நான் சிந்திப்பேன்.

டெஸ்ட் அல்லது டி20 போட்டிகளில் நிபுணத்துவம் பெற விரும்புகிறீர்களா?

டெஸ்ட் போட்டிகளில் வேகப் பந்து வீசவே விரும்புகிறேன். இன்-ஸ்விங் மற்றும் அவுட்-ஸ்விங் முறையின் வேகப்பந்து வீச விரும்புகிறேன். டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் இல்லை. நீங்கள் ஒரு சிறப்பான யார்க்கர் வீசுவீர்கள். ஆனால், அது பவுண்டரிக்கு அனுப்பப்படும். டி20 போட்டிகளில் நான் பேட் செய்யவே விரும்புகிறேன்.

படத்தின் காப்புரிமை Getty Images

இங்கிலாந்தில் கிரிக்கெட் வீரர்களின் வலைப் பயிற்சியின்போது அவர்களுக்கு எதிராக பந்து வீச உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றிக் கூறுங்கள்.

இங்கிலாந்தில் எம்.சி.சி யங் கிரிக்கெட்டர்ஸ் அணியில் நான் இருந்தேன். இங்கிலாந்து வரும் சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு பந்து வீச வைக்கும் ஒரு திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர். அப்போது இங்கிலாந்து அணிக்கு சில இடது கையில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் தேவைப்பட்டனர். அப்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. காரணம் அவர்கள் மிஷெல் ஜான்சன் மாற்று மிஷெல் ஸ்டார்க் ஆகியோரை எதிர்கொள்ள இருந்தனர்.

நீங்கள் மிகவும் வியக்கும் பந்துவீச்சாளர்கள் யார்?

ஜாகிர் கான், மிஷெல் ஜான்சன், மிஷெல் ஸ்டார்க் மற்றும் வாசிம் அக்ரம்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்?

மிகவும் நன்றாக உணர்கிறேன். இங்குள்ள தட்ப வெப்ப சூழல் எனக்கு உதவுவதால் நான் சிறப்பாக விளையாடுவதாக என் பயிற்சியாளர் கூறினார். அது உண்மையும்கூட.

உங்கள் அணியிலேயே மிகவும் இனிய வீரர் யார்?

நான்தான்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்