பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய இந்தியா - 4 தகவல்கள்

அபார பந்துவீச்சால் பாகிஸ்தானை சுருட்டிப் போட்ட இந்தியா; 4 சுவாரஸ்ய தகவல்கள் படத்தின் காப்புரிமை Twitter

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 69 ரன்களுக்குள் சுருக்கி இந்தியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட முக்கிய காரணங்களும், போட்டியின்போது நடைபெற்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகளையும் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

94 பால்களில் 102 ரன்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்து பாகிஸ்தானுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது. அணி சார்பில் மூன்றாவதாக களமிறங்கிய ஷுப்மன் கில் நிதானமாக ஆடி 94 பந்துகளை எதிர்கொண்டு 102 ரன்களை எடுத்தது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

நான்கு விக்கெட்களை கைப்பற்றிய இஷான்

படத்தின் காப்புரிமை Getty Images

போட்டியில் இந்தியா வென்றதற்கு அணியின் துல்லியமான பந்துவீச்சும் மிகப்பெரிய காரணம். அணியின் பந்துவீச்சாளர் இஷான் போரெல் ஆறு ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். சிவா சிங் மற்றும் ரியான் பராக் ஆகியோர் தலா இரு விக்கெட்களை கைப்பற்றினர்.

ஷூ லேஸ் அன்பு!

இந்திய அணி பேட் செய்து கொண்டிருந்த போது, அப்போது களத்திலிருந்து ஷுப்மன் கில்லின் ஷூ லேஸ் எதிர்பாராத விதமாக அவிழ பாகிஸ்தான் வீரர் ஒருவர் அதனை சரிசெய்தார். அடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது, இதேபோன்றதொரு நிலை உருவாக இந்திய வீரர் ஒருவர் உதவிக்கு வந்து ஷூ லேஸை சரி செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ராகுல் டிராவிட்டின் அர்பணிப்பு !

படத்தின் காப்புரிமை Getty Images

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வேறுயாருமல்ல ராகுல் டிராவிட்தான். அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றியை ராகுல் டிராவிட்டின் வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதையடுத்து இளையோர் கிரிக்கெட் அணி நிறைய முன்னேற்றத்தை கண்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்