இந்திய அணிக்கு வீரர்களைத் தரும் யு19 அணி- சுவாரஸ்ய தகவல்கள்
நியூஸிலாந்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளது இந்திய அணி. அதுகுறித்த சில முக்கிய தகவல்களை காண்போம்.
- 2000, 2008, 2012ஐத் தொடர்ந்து நான்காவது முறையாக இன்று உலகக்கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி.
- U-19 உலகக்கோப்பையை அதிக முறை வென்றது இந்திய அணிதான்.
- யுவராஜ் சிங், விராத் கோலி, ஜடேஜா மற்றும் ஷிகர் தவான் உள்ளிட்ட பல இந்திய அணி வீரர்கள் U-19 இந்திய அணியிலிருந்து வந்தவர்களேயாவர்.
- 2000ஆவது ஆண்டு இலங்கையில் நடந்த U-19 உலகக்கோப்பை போட்டியில் முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த U-19 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி விராத் கோலி தலைமையிலான இந்திய அணியினர் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றனர்.
- 2012ஆம் ஆண்டு நடந்த U-19 உலகக்கோப்பையில் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே தோற்கடித்து உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணியினர் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றினர்.
- இந்தாண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற U-19 உலகக்கோப்பையில் இந்திய அணியை ராகுல் ட்ராவிட் வழிநடத்த, கேப்டன் பிரித்வி ஷா தலைமையில் களமிறங்கிய இந்திய அணியினர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பை வென்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுக்கு 50 லட்ச ரூபாயும், அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தலா 30 லட்ச ரூபாயும், அணியை சேர்ந்த மற்ற ஊழியர்களுக்கு தலா 20 லட்ச ரூபாயும் ஊக்கப் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- U19 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது இந்தியா- ஆஸ்திரேலியா படுதோல்வி
- அமெரிக்கப் பெண்களுக்கு டாக்ஸி ஓட்டிய பிரபல பத்திரிகையாளர்
- சமூக ஊடகத்தில் பல ஆண்களுடன் நட்பு கொண்ட ஒரு பெண் #HerChoice
- 50 ஆண்டு முன்பு காணாமல் போன குழந்தைகளைத் தேடி தொழிற்சாலையில் தோண்டும் பணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்