கிரிக்கெட்: கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி: 5 முக்கிய அம்சங்கள்

வெள்ளிக்கிழமை செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 6வது இந்திய தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா எளிதாக வெற்றிபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் மூலம் இந்திய தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா 5:1 என்று கைப்பற்றியுள்ளது.

இந்த ஆட்டத்தின் 5 முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

1. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, முதலில் தென் ஆஃப்ரிக்காவை பேட் செய்யுமாறு அழைத்தார். புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். தென் ஆஃப்ரிக்கா அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 204 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

2. 205 ரன்கள் வெற்றி இலக்கோடு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் 18 ரன்களுடனும், ரோஹித் 15 ரன்களுடனும் வெளியேறினர். அடுத்து வந்த விராட் கோலி 82 பந்துகளில் 35வது சதம் அடித்து, ஆட்டமிழக்காமல் 2 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் அடித்து 129 ரன்கள் குவித்தார். ரானே 50 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 206 ரன்களை எடுத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

3. இந்த தொடரில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி 3 சதங்களோடு மொத்தம் 558 ரன்கள் எடுத்துள்ளார். இரு கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு பேட்ஸ்மன் எடுக்கின்ற அதிகப்பட்ச ரன்கள் இதுவாகும். இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 491 ரன்கள் எடுத்ததுதான் இதுவரை அதிகபட்ச ரன்களாக இருந்தது.

4. தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் அணியினர் சிறப்பாக பேட்டிங் செய்யாததும், இந்திய பந்து வீச்சு வீர்ர்களின் துல்லியமான பந்துவீச்சும் எதிரணியினரை 204 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்திய அணியால் முடிந்தது.

5. இந்த தொடரில் விளையாடிய டி வில்லியர்ஸ் 2008ம் ஆண்டுக்கு பிறகு 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டங்களை கொண்ட போட்டி ஒன்றில் 50 ரன்களுக்கு குறைவாக எடுத்திருப்பது இந்த தொடரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 6 ஒரு நாள் தொடர் போட்டியில் தென் ஆஃப்ரிக்க மண்ணில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி தீர்ப்பு: விவசாயிகள் மனநிலை என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காவிரி தீர்ப்பு: விவசாயிகள் மனநிலை என்ன?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :