டி20 கிரிக்கெட் தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

  • 19 மார்ச் 2018
படத்தின் காப்புரிமை AFP

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்.

அவரைப்பற்றிய சில தகவல்கள்

  • சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் இடக்கை பேட்ஸ்மேன் மற்றும் வலக்கை சுழற்பந்து வீச்சாளர்
  • இவர் விளையாடிய அணிகள்: இந்திய அணி, இந்தியா- U19, ஐபிஎல்- புனே அணி, தமிழ்நாடு மாநில அணி (ரஞ்சி, துலிப்), டி.என்.பி.எல்- தூத்துக்குடி
  • இவரது தந்தை சுந்தருக்கு சிறுவயதில் வழிகாட்டியாக இருந்த முன்னாள் ராணுவ வீரர் பி.டி. வாஷிங்டன் நினைவாக இவருக்கு பெயர் வைக்கப்பட்டது.
  • கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் புனே அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
படத்தின் காப்புரிமை Getty Images
  • முதல்தரப் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 31.29; பந்துவீச்சு சராசரி 26.93
  • நிதாகஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் எடுத்த 8 விக்கெட்டுகள் அவருக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: