டெஸ்ட் போட்டியில் வெறும் 58 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது எப்படி?

  • 22 மார்ச் 2018

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடர் ஆட்டத்தின் முதல் போட்டியில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இங்கிலாந்து அணி இழந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களில் சுருண்டது.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் டிரென்ட் போல்ட் 32 ரன்களை கொடுத்து 6 விக்கெட்களையும், டிம் செளத்தி 25 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை எடுத்திருந்தனர்.

27 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இங்கிலாந்து இழந்திருந்த நிலையில், கிரேய்க் ஓவர்டென் அவுட் ஆகாமல் 33 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை 58 ஆக உயர்த்தினார்.

ஆஸ்திரேலியாவில் இறுதியாக விளையாடிய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தோல்வியை தழுவிய நிலையில் தற்போது சொற்ப ரன்களில் இங்கிலாந்து அணி மொத்த விக்கெட்களையும் இழந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிம் செளத்தியை வாழ்த்தும் சக வீரர்கள்

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் போல்ட் மற்றும் செளத்தி பந்தின் சுவிங் நிலையை நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள்.

நியூஸிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கையாண்ட ஆட்ட பாணி படு சொதப்பலாக அமைந்தது.

இங்கிலாந்து விக்கெட்கள் அடுத்தடுத்து சொர்ப்ப ரன்களில் சரிய, மார்க் ஸ்டோன்மென் மட்டும் எப்படியோ தட்டுத்தடுமாறி ஒருவழியாக இரட்டை இலக்க ரன்களை அடைந்தார்.

மோசமான பேட்டிங் - முன்னாள் பந்துவீச்சாளர்

இன்றைய போட்டி குறித்து பிபிசியிடம் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரேமி சுவான், வீசப்பட்ட முதல் பந்திலிருந்தே இங்கிலாந்து வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், பேட்ஸ்மேன்கள் தெளிவற்ற முறையில் ஆடியதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து எடுத்த குறைந்த ரன்களின் பட்டியல்

45 ரன்கள் - ஆஸ்திரேலியா, சிட்னி, 1887

46 ரன்கள் - மேற்கிந்திய தீவுகள், போர்ட் ஆஃப் ஸ்பெயின், 1994

51 ரன்கள் - மேற்கிந்திய தீவுகள், கிங்ஸ்டன், 2009

52 ரன்கள் - ஆஸ்திரேலியா, தி ஓவல், 1948

53 ரன்கள் - ஆஸ்திரேலியா, லார்ட்ஸ், 1888

58 ரன்கள் - நியூசிலாந்து, ஆக்லாந்து, 2018

நி்யூசிலாந்து முன்னிலை

இங்கிலாந்தை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய நேரம் ஒரு மணி நிலவரப்படி, 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: