கிரிக்கெட் வீரர்களின் முறைகேடு: கோபத்தில் ஆஸ்திரேலிய மக்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

அவர்களின் எண்ணம் என்னவாக இருந்திருக்கும்?தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து பெரும்பாலான ஆஸ்திரேலிய மக்களின் மனதில் இருக்கும் கேள்வி இது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அணியின் தலைமைக்குழு வேண்டும் என்றே பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

முன்னணி கிரிக்கெட் வீரர்களை அதிகம் விரும்பி அவர்களை பெரிதும் போற்றக்கூடிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால், இந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மிகுந்த கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர். கிரிக்கெட் அணியின் மீதான அவநம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

"இந்த பிரச்சனை ஆஸ்திரேலியா மீதான பார்வையை கெடுத்துவிடுவதோடு, பல ஆண்டுகளுக்கு இது பேசப்படும்" என மெல்பர்னில் உள்ள டேகின் பல்கலைக்கழகத்தின் பேராசியர் டேவிட் ஷில்பரி கூறியுள்ளார்.

"அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டை பிரதிபலிக்கின்றனர். நாட்டுக்கு தேவை விளையாட்டு மற்றும் அதில் வெற்றி பெறுவதற்கான ஆர்வம். பிரதமர் பதவிக்கு பின், இங்கு பெரிதாக பார்க்கப்படுவது டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிதான்"

படத்தின் காப்புரிமை Getty Images

அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் இந்த முடிவுக்கு துணைபோன மற்ற வீரர்களை கடிந்த அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல், இந்த மோசடியை "அளவுக்கு மீறிய நம்பிக்கையின் விளைவு" என்று கூறியுள்ளார்.

"நமது நாடு பொதுவாக விளையாட்டில் ஊழல் ஏற்படுவதற்கு எதிராக போராடும் நாடு. ஆனால், தற்போது நமது அணியின் கேப்டனே ஏமாற்றுவேலையில் ஈடுபட்டுள்ளார். நம்மை நாமே விளையாட்டில் சிறப்புமிக்க நாடாக பார்க்கும் நினைப்பை, இந்த செயல் சிதைத்துவிட்டது" என்று சிட்னி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு சார்ந்த படிப்புகள் துறையின் மூத்த விரிவுரையாளர் ஸ்டீவ் ஜார்ஜாகிஸ் கூறுகிறார்.

"நம் ஹீரோக்கள் ஏதாவது தவறு செய்தால் அது ஒரு பெரிய அதிர்ச்சியாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: