பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்: வெல்லப்போவது யார்?

நாடுகள், மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிங்களை மட்டுமே பெரும்பாலும் ஊடங்கங்கள் வாயிலாக பார்த்த நேயர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளது பிபிசி தமிழ்.

வள்ளி சௌத்திரி - கோவில்பட்டி

பட மூலாதாரம், வள்ளி சௌத்திரி

படக்குறிப்பு,

புகைப்படம் - வள்ளி சௌத்திரி

பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடர் ஒன்றை சென்னையில் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த தொடரின் சிறப்பு என்னவெனில், போட்டிகள் பிபிசி தமிழ் உருவாக்கிய தனித்துவ ஸ்ட்ரீட் விதிகளின் அடிப்படையில் நடக்கவிருக்கிறது.

தமிழகத்தில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் மிகவும் பிரபலமானது. ஆடுகளத்தை பொறுத்தும், வீரர்கள் மற்றும் விளையாடும் நேரத்தை பொருத்தும் விதிகளை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வது இவர்களின் வழக்கம்.

ஐபிஎல்லில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் முதல் பல வீரர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் இருந்துதான் தங்களது பயணத்தை துவங்கியிருக்கிறார்கள்.

வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்னையில் ஞாயிற்று கிழமை என்றால் அருகிலுள்ள காலி இடங்களில் கிரிக்கெட் விளையாடத் துவங்கிவிடுவார்கள். தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் இருந்து நான்கு அணிகள் லீக் சுற்று போட்டிகள் மூலமாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இவை வரும் ஞாயிறு கிழமை அன்று சென்னை, மந்தைவெளி மைதானத்தில் நடக்கவுள்ள அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன.

காணொளிக் குறிப்பு,

தெரு கிரிக்கெட் ரசிகரா நீங்கள்? உங்களை இந்த காணொளி கவரலாம்

இந்தப் போட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளுடன் நடக்கவுள்ள இந்த போட்டிகள் பிபிசி சமூக ஊடகங்களில் ஞாயிறு மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

ஒரு புதிய அனுபவத்துக்கு தயாராகுங்கள்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: