பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்: தொடங்கியது சென்னை Vs ராமநாதபுரம் அரை இறுதி போட்டி

ஸ்ட்ரீட் கிரிக்கெட்

பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகளின் அரை இறுதி மற்றும் இறுதி சுற்றுப் போட்டிகள் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன. போட்டிகள் பிபிசி தமிழ் உருவாக்கிய தனித்துவ ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளின் அடிப்படையில் நடக்கவிருக்கிறது.

காலை 11 மணி அளவில் தொடங்க உள்ள முதல் அரை இறுதி போட்டியில் சென்னை மற்றும் ராமநாதபுரம் அணிகள் மோதுகின்றன. சென்னை மந்தைவெளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும்.

இந்தப் போட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளுடன் நடக்கவுள்ள இந்த போட்டிகள், பிபிசி சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

பிபிசி தமிழ் உருவாக்கிய ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை படிக்க: பிபிசி தமிழின் பிரத்யேக தெரு கிரிக்கெட் விதிகள் - 25

நாடுகள், மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிங்களை மட்டுமே பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாக பார்த்த நேயர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை இதன் வாயிலாக வழங்கவுள்ளது பிபிசி தமிழ்.

அணிகளின் விவரங்கள்

சென்னை சூப்பர் வாரியர்ஸ்

திருச்சி சிங்கம்

ஈரோடு ஸ்டார்ஸ்

ராமநாதபுரம் சீ ரைடர்ஸ்

ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கு பெயர் போன தமிழகம்

தமிழகம் முழுவதும் பரவலாக விளையாடப்படுவது கிரிக்கெட். இடம், சூழ்நிலை, வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து சர்வதேச அளவில் விளையாடப்படும் கிரிக்கெட் விதிகளில் மாற்றங்கள் செய்து பல தரப்பினராலும் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.

அவ்வளவு ஏன்? ஐ பி எல்லில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் முதல் பல வீரர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் இருந்துதான் தங்களது பயணத்தை துவங்கியிருக்கிறார்கள்.

தெருக்கள், காலி வகுப்பறைகள், ஆற்றங்கரையோரங்களில் கடற்கரை, மொட்டை மாடி என எங்கும் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. தமிழகத்தின் ஓர் அடையாளமாக மாறத் துவங்கியிருக்கும் வீதி கிரிக்கெட்டில் என்னென்ன வேடிக்கையான விதிகள் இருக்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பிபிசி தமிழ், பிரத்யேக தனித்துவ ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை தயாரித்துள்ளது.

அதனடிப்படையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடர் ஒன்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் லீக் சுற்றுப் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றன.

அதில் வெற்றி பெற்ற சென்னை, ஈரோடு, திருச்சி மற்றும் ராமநாதபுரம் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

பிபிசி தமிழ் நேயர்களுக்காக இந்த போட்டிகள் அனைத்தும் பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்யப்படும். மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள பிபிசி தமிழுடன் இணைந்திருங்கள்.

ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: