#BBCStreetCricket இறுதி போட்டி: கோப்பையை கைப்பற்றியது ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி

நேரலையில் காண:ஆரவாரமாக தொடங்கியது #BBCStreetCricket - ஃபேஸ்புக் நேரலை
பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாட்டின் இறுதி ஆட்டத்தில் ஈரோடு அணியை வீழ்த்திய ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. விறுவிறுப்பான இறுதி போட்டியில் முதலில் பேட் செய்த ராமநாதபுரம் அணி 99 ரன்கள் எடுத்தது. 100 ரன்களை இலக்காக வைத்து ஆடத்தொடங்கிய ஈரோடு அணி, முதலில் அதிக சிக்சர்கள் அடித்து, அதிக ரன்களை குவிக்க தொடங்கியது.
ஆனால், இக்கட்டான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நான்காவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களில் சுருண்டது.
19 ரன்கள் வித்தியாசத்தில் பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் கோப்பையை ராமநாதபுரம் அணி கைப்பற்றியது.
ஈரோடுஅணி:
5:21 கோப்பையை கைப்பற்றியது ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி
5:16 3.5 ஓவர்களில் ஈரோடு அணியின் ஸ்கோர் - 80/4
5:15 42 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே ஈரோடு அணிக்கு தேவை
5:09 ஹாட்ரிக் சிக்சுகளை விளாசிய ஈரோடு அணி
5:05 2.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 38 ரன்கள்.
5:02 முதல் ஓவர், இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது ஈரோடு அணி
5:00 பேட்டிங்கை தொடங்கியது ஈரோடு ஸ்டார்ஸ் அணி
4:49 8.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 99 ரன்கள் எடுத்துள்ளது சீ ரைடர்ஸ். ஈரோடு அணிக்கு 100 ரன்கள் இலக்கு.
4:37 நான்காவது ஓவர் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்களை குவித்துள்ளது ராமநாதபுரம் அணி
4:32 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இறுதி போட்டியில், இரண்டாவது விக்கெட்டை எடுத்தது ஈரோடு அணி.
4:27 முதல் ஓவர் முடிவில், 14/1 ரன்களை எடுத்துள்ளது ராமநாதபுரம் அணி.
4: 24 முதலில் பேட் செய்யத் தொடங்கிய ராமநாதபுரம் அணி, முதல் ஓவர் முடிவதற்கு முன்பே ஒரு விக்கெட்டை இழந்தது
4:15 டாசை வென்ற ஈரோடு அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
4:10 #BBCStreetCricket இறுதி போட்டி ஈரோடு ஸ்டார்ஸ் மற்றும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே தொடங்கியது
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் பிபிசி தமிழின் #BBCStreetCricket சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள்.
திருச்சி சிங்கம் அணி
இரண்டாவது அரை இறுதி போட்டியின் விவரம்:
திருச்சி சிங்கம்:
2.47: 117 ரன்களில் சுருண்டது திருச்சி அணி.
2:44 ஒன்பதாவது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை குவித்துள்ளது திருச்சி சிங்கம் அணி
2:40 16 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டும்.
2:35 ஏழாவது ஓவரில், 101 ரன்கள்; 3 விக்கெட்டுகள் இழப்பு
2:27 இரண்டாவது விக்கெட்டை இழந்தது திருச்சி சிங்கம் அணி.
2:21 முதல்பவர் ப்ளே முடிவில் திருச்சி சிங்கம் அணி 30 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால், பவர் ப்ளே முடிவில் ஈரோடு அணி 76 ரன்கள் குவித்திருந்தது.
திருச்சி சிங்கம்:
2:17 முதல் ஓவர் முடிவில் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது திருச்சி அணி.
2:15 பேட் செய்ய தொடங்கியது திருச்சி சிங்கம் அணி
2:02 10 ஓவர்களை முழுதும் முடிக்காமல் 138 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஈரோடு அணி. திருச்சி அணி வெற்றி பெற 139 ரன்கள் குவிக்க வேண்டும்.
1:59 ஏழாவது ஓவர் முடிவில், 128 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழப்பு.
1:55 இதுவரை 122 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்தது ஈரோடு அணி.
1:52 நான்காவது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, 99 ரக்கள் குவிப்பு.
1:47 முதல் விக்கெட்டை இழந்தது ஈரோடு ஸ்டார்ஸ்.
1:46 பல சிக்சுகளை விளாசிய ஈரோடு அணி, இரண்டாவது ஓவர் முடிவில் 76 ரன்களை குவித்தது.
1:40 முதல் ஓவர் முடிவில், 40 ரன்களை குவித்தது ஈரோடு அணி.
ஈரோடு அணி:
1:36 டாஸ் வென்றது திருச்சி அணி
1:34 திருச்சி சிங்கம் மற்றும் ஈரோடு ஸ்டார்ஸ் இடையேயான அரை இறுதி போட்டி துவங்கியது.
ராமநாதபுரம் அணி
முதல் அரை இறுதி போட்டி விவரம்:
1:13 43 ரன்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சென்னை அணி
சென்னை அணி:
1:12 அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது சென்னை சூப்பர் வாரியர்ஸ். இரண்டு ஓவர் முடிவுகளில் 3 விக்கெட்டுகள் சரிந்தன.
1:06 முதலாவது ஓவர் முடிவில், முதல் விக்கெட்டை இழந்தது சென்னை அணி
1:00 103 ரன்கள் இலக்காக வைத்து, சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.
12.48 சென்னை அணிக்கு 103 ரன்கள் இலக்கு.
12.40 கடைசி பேட்மேன் பொறுப்பாக விளையாடிய நிலையில், தொடர்ந்து பல சிங்கிள்கள் எடுத்து, அணியின் ரன் சிறப்பாக அதிகரித்து வருகிறது.
12.39 நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்துள்ள நிலையில், கடைசி பிளேயர் மட்டும் களத்திலுள்ளார்.
12.33 இரண்டாவது விக்கெட்டை இழந்தது ராமநாதபுரம் சீ ரைடர்ஸ்.
ராமநாதபுரம் அணி:
12.28 முதல் விக்கெட்டை இழந்தது ராமநாதபுரம் அணி.
12.27 ராமநாதபுரம் அணி முதல் ஓவரிலேயே 12 ரன் எடுத்துள்ளது.
12.12PM: சென்னை அணி டாஸ் வென்று, ராமநாதபுரம் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
முதல் அறை இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணியும், ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர்.
பிபிசி தமிழ் நடத்தும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாட்டுகள் சென்னை மந்தைவெளியில் தொடங்கியது. இன்று இரண்டு அரை இறுதி போட்டிகளும், ஒரு இறுதி போட்டியும் நடைபெறுகிறது. இந்த ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகளுக்காக பிபிசி தமிழ் பிரத்யேக விதிமுறைகளை அளித்துள்ளது.
அதனடிப்படையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடர் ஒன்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் லீக் சுற்றுப் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றன.
அதில் வெற்றி பெற்ற சென்னை, ஈரோடு, திருச்சி மற்றும் ராமநாதபுரம் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்