இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள்

இன்னும் சில மணி நேரங்களில் காமன்வெல்த் போடிகள் தொடக்கம் படத்தின் காப்புரிமை RYAN PIERSE/GETTY IMAGES

ஏறத்தாழ உலகின் 150 கோடி மக்களின் விழிகள் இன்று ஆஸ்திரேலியாவின் கராரா அரங்கத்தில் தொடங்க இருக்கும் 21 வது காமன்வேல்த் போட்டிகளை நோக்கியே உள்ளன.

பாதுகாப்பு, போக்குவரத்து சார்ந்த பிரச்சனைகள் மற்றும் விற்கப்படாத நுழைவு சீட்டுகள் என அனைத்தையும் கடந்து, காமன்வெல்த் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இந்நிகழ்வின் வெற்றி குறித்து பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் சார்பாக இந்நிகழ்வினை இளவரசர் சார்லஸ் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் அவரது மனைவி கமிலாவும் கலந்து கொள்கிறார்.

இந்த தொடக்கவிழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் கலந்து கொள்ள இருக்கிறார்.

`டிகேடிடோ ஆர்கெஸ்ட்ரா` மற்றும் `பாஞ்சாரா அபரிஜென்ஸ்' பெல்லி நடனம் இந்த தொடக்க விழாவில் இடம் பெற இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், 'மிகேலி' திமிலங்கத்தின் பெரிய சிலையும் இந்நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இந்த திமிங்கலம் வருடத்திற்கு ஒரு முறை, குளிர்காலத்தில் தங்ககடற்கரை வழியாக செல்லும். ஒட்டுமொத்த கராரா அரங்கமும், தங்ககடற்கரை போல மாற்றப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DAN PELED/AFP/GETTY IMAGES

ஒலி/ ஒளி சாதனங்கள்

இந்த அரங்கத்தில் 46 டன் எடையுள்ள ஒலி/ஒளி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பரவலாக பேச அனுமதி மறுக்கப்பட்டதற்காக குயின்ஸ்லாந்த் பிரதமர் அனஸ்டேஷ் பலஷே வருத்தமடைந்திருக்கிறார்.

தனது வருத்தத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் கோபமான உரையின் மூலன் வெளிபடுத்தி உள்ளார்.

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் கார்ப்பரேஷனின் தலைவர் பீட்டர் பெட்டியும், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர் சுயிசி மார்ட்டினும் இந்நிகழ்வின் வரவேற்புரையை ஆற்ற இருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை MARK KOLBE/GETTY IMAGES

மன்னிப்பு கோரிய சேனல் 9

இந்த தொடக்க நிகழ்வு குறித்த பல தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகாக பிரபலமான சேனல் 9 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் பறிக்கப்பட்டு இருக்கிறது. தொடக்க நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பயிற்சியினை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியதுதான் இதற்கு காரணம்.

தொலைக்காட்சி தங்கள் தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக பணி செய்யும் 16,000 தன்னார்வலர்கள் அமைதியாக இருக்கும் போது, சேனல் 9 தொலைக்காட்சி மட்டும் பொறுமை இழந்தது ஏன் என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வாதம்.

இந்தியா - பாக் ஹாக்கி போட்டி

ஒரு காலத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஹாக்கி போட்டிகளில் கோலோச்சின. இரு நாட்டினரும், ஹாக்கி போட்டியை காண்பதில் அதிக ஈடுபாடு காட்டுவர். இப்போது அவ்வாறாகவெல்லாம் இல்லை என்றாலும், ஏப்ரல் 7 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி போட்டியை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

காமன்வெல்த்தில் நடக்க இருக்கும் பல போட்டிகளின் டிக்கெட் இன்னும் முழுமையாக விற்கப்படவில்லை என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டியின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.

ஆஸ்திரேலியாவில் வாழும் பல இந்தியர்கள் இந்த போட்டிக்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை BRADLEY KANARIS/GETTY IMAGES

ஏமாற்றம்

ஈஸ்டர் பண்டிகையின் போது கோல்ட் கோஸ்ட் பகுதி சுற்றுலா பயணிகளால் திக்குமுக்காடும். காமன்வெல்த் போட்டிகள் காரணமாக இன்னும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என்று காமன்வெல்த் ஏற்பாட்டாளர்கள் கருதினர். ஆனால், நடந்ததோ அதற்கு எதிர்மறையாக இருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. 20 சதவீத விடுதிகள் இன்னும் காலியாகதான் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்