காமன்வெல்த்தில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா

பட மூலாதாரம், MIB
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.
56 கிலோ பளு தூக்கும் போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கே.பி. குருராஜா வெள்ளிபதக்கத்தை வென்றுள்ளார்.
கர்நாடகாவின் குந்தாபூரை சேர்ந்த குருராஜாவின் தந்தை ஓட்டுநர் ஆவார். குருராஜாவின் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்.
கர்நாடகாவின் தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் கல்வி பயின்ற குருராஜா தனது பளுதூக்கும் கனவை அங்கிருந்தே தொடங்கியுள்ளார்.
2016ஆம் நடைபெற்ற சீனியர் பளு தூக்கும் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற பெருமை பெற்றவர் குருராஜா.
கவுஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய போட்டிகளில் தங்க பதக்கத்தையும் வென்றுள்ளார் குருராஜா.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்