காமன்வெல்த்: ஆந்திர பளுதூக்கும் வீரருக்கும் தங்கம்
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சனிக்கிழமை இந்திய பளுதூக்கும் வீரர் வெங்கட் ராகுல் ராகாலா 85 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், AFP
வெங்கட் ராகுல் ராகாலா
ஸ்னாட்ச் பிரிவில் இவர் 151 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 187வும் ஆக மொத்தம் 338 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் சனிக்கிழமை தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அதே பளுதூக்குதலின் வேறொரு பிரிவில் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வெங்கட் ராகுல் ராகாலா பதக்கம் வென்றிருப்பது இந்திய அணிக்கு இரட்டை மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
வெங்கட் ராகாலாவின் வெற்றியின் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ஆறாகியுள்ளது. இவற்றில் நான்கு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகே உள்ள ஸ்டூவர்ட்புரம் என்ற பின்தங்கிய பகுதியில் இருந்து மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் வெங்கட் ராகுல் ராகாலா என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது வயது 21.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்