காமன்வெல்த் போட்டி: 4 நாட்களில் 10 பதக்கங்களை குவித்த இந்தியா

மனு பேகர் மற்றும் ஹீனா சித்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

மனு பேகர் மற்றும் ஹீனா சித்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து வெள்ளியை கைப்பற்றி உள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ள 16 வயதான மனு, ஹரியானவை சேர்ந்தவர் ஆவார்.

இதனையடுத்து, ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவை சேர்ந்த ரவிகுமார்.

தற்போது 6 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா, காமன்வெல்த் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இத்துடன் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வெள்ளி வென்ற ஹீனா சித்து

முன்னதாக, பெண்களுக்கான 69 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பூனம் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.

பெனாரசை சேர்ந்த பூனம், மொத்தம் 222 கிலோ எடையை தூக்கி இந்த பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: