காமன்வெல்த்: தொடர்கிறது இந்தியாவின் தங்க வேட்டை, மகளிர் டேபிள் டென்னிஸில் தங்கம்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்-இல் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சிங்கப்பூர் அணிக்கு எதிராக நடந்த இந்தப் போட்டியில், இன்று, ஞாயிறன்று இந்தியா வென்றுள்ளது. காலிறுதியில் மலேசியா மற்றும் அரையிறுதியில் இங்கிலாந்து ஆகிய நாட்டு அணிகளை இந்தியா வென்றது.

மௌமா தாஸ், மனிகா பத்ரா, சுதிர்த்தா முகர்ஜீ, பூஜா சகஸ்ரபுதே மற்றும் மதுரிகா பட்கர் ஆகியோரை உள்ளடக்கிய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி இந்தியா சார்பில் பங்கேற்றது.

இதுவரை இந்தியா வென்றுள்ள 12 பதக்கங்களில் ஏழு பதக்கங்கள் தங்கம் ஆகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது ஏழு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்