காமன்வெல்த்: இந்தியாவுக்கு 11ஆவது தங்கப் பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்,25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

காமன்வெல்த் போட்டியில் இது இந்தியாவுக்கு 11ஆவது தங்கம் ஆகும்.

ஹீனா சித்து குறித்து மேலும் தெரிந்து கொள்ள: பல் மருத்துவம் முதல் உலகக் கோப்பை வரை - துப்பாக்கித் தாரகை ஹீனா சித்து

இதே பிரிவில் ஆஸ்திரேலியா வெள்ளிப் பதக்கமும், மலேசியா வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளது.

முன்னதாக ஹாக்கி போட்டிகளில், மலேசியா அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் ஹர்மர்பிரீத், ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததை தொடர்ந்து இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்தது ஆனால் அது 13 நிமிடம்தான் நிலைத்தது. ஏனெனில் ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் மலேசிய அணி கோல் அடித்து 1-1 என்று ஆட்டத்தை சமன் செய்தது.

இருப்பினும் ஆட்டத்தின் 44ஆவது நிமடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் மீண்டும் ஒரு கோல் அடித்ததில் இந்தியா 2-1 என்ற நிலையில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்