புற்றுநோயால் தாயை இழந்த ராகுல்: காமன்வெல்த்தில் தங்கம் வென்ற கதை

  • 12 ஏப்ரல் 2018
ராகுல் படத்தின் காப்புரிமை Getty Images

''நீ வெற்றி மேடையில் நிற்கும்போது பின்னணியில் தேசிய கீதம் ஒலிக்க இந்திய தேசியக் கொடி மெல்ல உயரும். அதுதான் எனக்கு தேவை. உனக்கு கிடைக்கும் பணமோ, புகழோ எனக்குத் தேவை இல்லை'' என ராகலா மது காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள புறப்பட்ட அவரது மகன் ராகலா வெங்கட் ராகுலிடம் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 7 அன்று பளுதூக்குதலில் 21 வயது ராகுல் தங்கம் வென்ற போது அவரது தந்தையின் கனவு நனவாகியிருக்கிறது. ராகுலின் வாழ்க்கையை வடிவமைத்ததில் ராகலா மதுவுக்கு முக்கிய பங்கு உண்டு. மதுவுக்கு இந்த பயணம் எளிதானதாக இல்லை.

ஆந்திர பிரதேசத்தில் பாபட்லா அருகேயுள்ள ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் இருந்து வந்த ராகலா மது தனது பண்ணை மற்றும் வீட்டை விற்று தனது குழந்தையின் பயிற்சிக்காக செலவிட்டிருக்கிறார். '' நான் என்னுடைய கல்லூரியில் ஓர் ஆல்ரவுண்டர் விளையாட்டு வீரன்.

படத்தின் காப்புரிமை Madhu/Rahul

நான் ஓர் பளுதூக்கும் வீரனாக இருந்தாலும் ஆந்திரபிரதேசம் பிரிக்கப்படாதிருந்த சமயத்தில் என் மாநிலத்தின் சார்பாக தேசிய அளவில்

திருமணத்துக்கு பிறகு நிதி பிரச்னைகள் காரணமாக மது விளையாட்டுக்கு முழுக்கு போட்டார். 1996 -ம் ஆண்டு அவருக்கு ராகுல் பிறந்தார். தனது மகனுக்கு பளுதூக்கும் வீரராக உருவாக ஆர்வம் இருக்கிறதா என பார்க்க விரும்பினார் மது.

'ராகுலுக்கு மூன்று வயது இருந்தபோது என்னைப் போலவே அவன் எடை கட்டைகளை தூக்கி விளையாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு விளையாட்டை கற்பதற்கு அதிக ஆர்வம் இருந்தது. நான் அவனுக்கு மெல்ல பயிற்சியளிக்கத் துவங்கினேன்'' என்கிறார் மது. நடந்த கபடி போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்'' என்கிறார் மது. கபடியில் மது வென்ற தங்க பதக்கங்கள் எண்ணிக்கை 14.

படத்தின் காப்புரிமை Madhu/RAHUL

''மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கும்போது நான் ராகுலை உடன் அழைத்துச் செல்வேன். ஏனெனில் பயிற்சியளிக்கத் துவங்குவதற்கு முன்னர் என் மகன் விளையாட்டை முறையாக முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் என விரும்பினேன்'' என்கிறார் மது.

தெலங்கானாவில் ஹகீம்பேட்டில் உள்ள விளையாட்டு பள்ளியில் ராகுல் சேர்க்கப்பட்டார். அவர் இதுவரை 56 சர்வதேச தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

மதுவின் விருப்பப்படி அவரது இளைய மகன் வருணும் தற்போது பளுதூக்குதல் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் வருண் தங்கம் வென்றுள்ளார். வருண் மற்றும் ராகுல் இருவரும் பஞ்சாபில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Madhu/Rahul

''நான் சாதிக்க முடியாததை எனது இரண்டு மகன்களும் சாதிப்பதை பார்க்கும்போது மனது நிறைவாக இருக்கிறது. பழங்குடி குடும்பத்தில் பிறந்த எனக்கு, குடும்பத்தின் பசியை விரட்டுவதா அல்லது விளையாட்டின் மீதுள்ள எனது ஆர்வத்தை முன்னிலையில் வைப்பதா என தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. நான் எனது குடும்பத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் எனது மகன்கள் அவர்களது கனவை துரத்த என்னால் உதவ முடிகிறது என்பதை நான் பெருமையாக கருதுகிறேன்'' என்று மது தெரிவித்தார்.

ராகுல் பற்றி மது பேசுகையில், ''அவன் மிகவும் அடக்கமானவன்; அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை; நானும் அவனது அம்மாவும்தான் அவனுக்கு நண்பர்கள். திரைப்படத்துக்குச் செல்வதற்குகூட அவன் எங்களை அழைப்பான். ஆகஸ்ட் 2016-ல் அவனது அம்மாவை புற்றுநோய்க்கு பறிகொடுத்த பின்னர் மிகவும் வருத்தமடைந்தான். ஆனால் ஆட்டத்தில் தனது கவனத்தை விட்டுவிடவில்லை'' என விவரிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Madhu/Rahul

ராகுல் தனது பெற்றோர்களான மது மற்றும் நீலிமா பெயர்களை அவரது நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறார். தனது காமன்வெல்த் பதக்கத்தை அவரது பெற்றோர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.

ராகுலுக்கு கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை உரிய நேரத்தில் கிடைக்கும் என நம்புவதாக அவரது தந்தை மது தெரிவித்துள்ளார். ''எதிர்பார்த்த அளவுக்கு மாநில அரசிடம் இருந்து போதுமான ஊக்கம் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு சிறு வருத்தம் உண்டு. அந்த நிலை மாறும்'' என நம்பிக்கையோடு கூறுகிறார் மது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்