காமன்வெல்த்: மல்யுத்தத்தில் மீண்டும் தங்கம் வென்ற இந்தியா

  • 12 ஏப்ரல் 2018
சுஷில் குமார் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுஷில் குமார்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்த பிரிவில் இந்தியா இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவின் சுஷில் குமார், ஆண்களுக்கான ஃபிரீ ஸ்டைல் 74 கிலோ எடைப்பிரிவில் தென் ஆஃபிரிக்க வீரர் போத்தாவை 80 வினாடிகளில் வீழ்த்தி தங்கத்தை வென்றார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுஷில், இது தமக்கு பெருமையான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வென்ற தங்கத்தை, தன் பெற்றோர், தன் குரு மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு சமர்ப்பிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் மல்யுத்த வீரர் ராகுல் அவாரே ஆண்களுக்கான ஃபிரீ ஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஸ்டீவன் தகாகாஷியை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராகுல் அவாரே

அரையிறுதியில் இவர் பாகிஸ்தான் வீரர் முகமது பிலாலை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 14 தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலப்பதக்கங்கள் பெற்று இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்