காமன்வெல்த்: சாய்னா வெற்றி, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

  • 15 ஏப்ரல் 2018
காமன்வெல்த்: சாய்னா வெற்றி, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் படத்தின் காப்புரிமை Getty Images

காமன்வெல்த் போட்டியின் பதினோராவது நாளான இன்று சாய்னா நெவால் பேட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் அவர் பிவி சிந்துவை தோற்கடித்து இப்பதக்கத்தை கைப்பற்றினார்.

முதல் சுற்று 22 நிமிடங்கள் நடந்தது. தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சாய்னா அந்த சுற்றில் 21 - 18 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

இரண்டாவது சுற்றில், சிந்து, நெய்வாலை வீழ்த்த எவ்வளவோ முயன்றார். ஆனால், நெய்வால் திறமையாக விளையாடி 23 - 21 என்ற கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.

சிந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தியா 26 தங்கப்பதக்கங்களுடன் காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இதுவரை இந்தியா குவித்துள்ள மொத்த பதக்கங்கள் 62.

78 தங்கத்துடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 43 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: