ஐபிஎல்: பெங்களூருவை வென்று சிஎஸ்கே மீண்டும் முதலிடம் - 5 சுவாரசியங்கள்

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று (சனிக்கிழமை) புனேயில் நடந்த 35வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில், பெங்களூரு அணியை 127 ரன்களுக்குள் சென்னை அணி கட்டுப்படுத்தியது.

எளிதான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக எளிதாக 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 128 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 5 சுவாரசியங்கள்

இன்றைய வெற்றியின் மூலம் மொத்தம், இந்த தொடரில் 10 ஆட்டங்களில் 7 வெற்றிகளை குவித்துள்ள சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற சென்னை அணி பொங்களூருவை முதலில் மட்டை பிடித்து ஆட அழைத்தது. ஜடேஜாவும், ஹர்பஜன் சிங்கும் மிகவும் கச்சிதமாக பந்து வீசி பெங்களூரு ரன்கள் குவிப்பதை கட்டுப்படுத்தினர். 8 ஓவர்கள் வீசி இருவரும் 2 பவுண்டரிகளுடன் மொத்தம் 40 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், இன்றைய ஆட்டத்தில் அடித்த 3 சிக்ஸர்களுடன் மொத்தம் 27 சிக்ஸர்கள் அடித்து தோனி முதலிடம் பெற்றுள்ளார். 25 சிக்ஸர்கள் அடித்த கெயிலை தோனி முந்தியுள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் 41 பந்துகளுக்கு 53 ரன்களும், டிம் சௌத்தி 26 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்ததுதான் அணியில் அதிகமாக எடுத்த ரன்களாகும். மற்ற எட்டு வீரர்களும் ஒற்றை இலக்கை தாண்டாமல் பெவிலியனுக்கு திரும்பியது தோல்விக்கு வித்திட்டது.

4 ஓவர்கள் பந்து வீசி வெறும் 18 ரன்களே கொடுத்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்