ஐபிஎல்லின் முதல் ஹாட்ரிக்கை எடுத்தவர் யார்? #BBCIplQuiz-8

ஏ பி டிவில்லியர்ஸ் படத்தின் காப்புரிமை AFP

பதினொன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் குறித்து ஒரு ரசிகராக நீங்கள் எவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

வாழ்த்துகள்.

1. ஐபிஎல்லின் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் யார்?

1. சோஹைல் தன்வீர்

2. யுவராஜ் சிங்

3. லக்ஷ்மிபதி பாலாஜி

2. முதல் பத்து சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , ஒரு போட்டியில் எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் எவ்வளவு?

1. 58

2. 92

3. 67

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

3. முதல் பத்து ஐபிஎல் சீசன்களில், எந்த அணி ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்துள்ளது?

1. சென்னை சூப்பர் கிங்ஸ்

2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

3. மும்பை இந்தியன்ஸ்

4. ஏ பி டிவில்லியர்ஸ் எந்த அணிக்கு எதிராக 43 பந்துகளில் சதம் விளாசினார்?

1. குஜராத் லயன்ஸ்

2. கிங்ஸ் லெவன் பஞ்சாப்

3. புனே சூப்பர் வாரியர்ஸ்

5. ஐபிஎல்லில் இதுவரை ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய வீரர் யார்?

1. முரளிவிஜய்

2. ஷ்ரேயஸ் அய்யர்

3. ரோஹித் ஷர்மா

விடைகள்

1. லக்ஷ்மிபதி பாலாஜி (2008 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார் பாலாஜி)

2. 67 (2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா)

3. மும்பை இந்தியன்ஸ் (2017-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி)

4. குஜராத் லயன்ஸ் (2016-ம் ஆண்டு லீக் போட்டியொன்றில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 43 பந்தில் சதமடித்தார்)

5. முரளி விஜய் (சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முரளி விஜய் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2010-ல் நடந்த ஒரு போட்டியில் 11 சிக்ஸர்கள் விளாசினார்)

புள்ளிகள்

0 - நீங்கள் டக் அவுட். இன்னும் பயிற்சி வேண்டும்.

1-2 - அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்

3-4 - அபாரம். அடுத்தடுத்த குவிஸ் போட்டிகளில் சிக்ஸர் அடியுங்கள்

5 - அட்டகாசம். நீங்கள் சிக்ஸர் விளாசிவிட்டீர்கள் !

முந்தைய ஐபிஎல் குவிஸ் போட்டிகளில் பங்குபெற :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்